Category Archives: இசை

இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்

1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ”…பேரு ஷாஜி தாமஸ்” என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில் ஏற்படும் பதற்றம் காணச்சகிக்கத்தக்கதல்ல. சிலர் தங்கள் செவித்திறனை நம்பாமல் ”மேசை விற்கிறாருஙகளா? எங்க?” என்றுகேட்டு ”…சார் ஆக்சுவலா இப்ப இந்த டபிள் … Continue reading

Posted in ஆளுமை, இசை, நகைச்சுவை | Tagged , , | 3 Comments

குர்அதுல் ஜன் ஹைதரின் 'அக்னி நதி '

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும் சாக்கடைத் திறப்புகள். சரிந்த பாசிபற்றிய படிக்கட்டின் வழியாக நடந்தேன். மூதாதையருக்காக நீர்க்கடன்செய்யும் திரள். மரண மந்திரங்கள். துயரம் கப்பிய முகங்கள். இறந்துபோன … Continue reading

Posted in இசை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 1 Comment

கேள்வி பதில் – 74

இலக்கியம் தரும் புரிதலும் கண்ணோட்டமும் போதாது, பல சமயங்களில் பிற துறைகள் தொடும் விஷயங்களை/முன் வைக்கும் கருத்துகள் இலக்கியம் மூலம் வரும் சாத்தியம் மிகக் குறைவு. எனவே நான் இலக்கியமற்றது 95% இலக்கியம் 5% படிக்கிறேன். தமிழில் வெளிவரும் சிறுபத்திரிகைகள் எனக்கு அலுப்பூட்டுகின்றன என்கிறார் என் நண்பர். இது குறித்து உங்கள் கருத்தென்ன? சிறுபத்திரிகைகள் ஏன் … Continue reading

Posted in இசை, இலக்கியம், கேள்வி பதில், வாசிப்பு | Tagged , | 1 Comment

கேள்வி பதில் – 69

கண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார்? பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா? பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா? நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன்? என்றாலும் இப்பொழுதும் திரைப்பாடல்களில் பாரதியின் பாடல்கள் எந்த … Continue reading

Posted in இசை, கேள்வி பதில், திரைப்படம் | Tagged , , | Leave a comment

கேள்வி பதில் – 19

இசை, சூழல், சந்தர்ப்பம் கலந்து உருவாகும் திரைப்பாடல்களும் நல்ல கவிதைகள்தானே? — பாஸ்டன் பாலாஜி. இலக்கியத்தை அதன் அடிப்படை இயல்பு சார்ந்து வகைப்படுத்திக் கொள்வது அனுபவங்களைத் தெளிவாக உள்வாங்க உதவும். இலக்கியத்தின் அடிப்படைக் குணங்கள் மூன்று. அ] வாழ்க்கையையும் மனதையும் ஆழ்ந்தறிய முயலல். ஆ] மொழியில் வாழ்க்கையைச் சித்தரிப்பதை அறிதல்முறையாகக் கையாளுதல் இ] அச்சித்தரிப்பை ஆழ்மனம் … Continue reading

Posted in இசை, கேள்வி பதில், திரைப்படம் | Tagged , , | Leave a comment

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை , விஜய நகர ஆதிக்க கால கட்டத்தில் மறு கண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன் வைக்கப் பட்டது. காலப் போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப் … Continue reading

Posted in ஆளுமை, இசை, தமிழகம், வரலாறு | Tagged , , , , , | Leave a comment

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்

தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது கணிதம் இளங்கலையும் மதத் தத்துவத்தில் முதுகலையும் படித்தவர். குற்றாலம் அருகேயுள்ள இடைக்கால் (கவிஞர். கலாப்பிரியாவின் ஊர்) ஐ சேர்ந்தவர். 24.12.1946 இல், பிறந்தவர் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுடையவர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழிசை பாடகரான ராஜா முகம்மது அடிப்படையில் ஸ்பெஷல் நாடக ராஜபார்ட் நடிகர். நூற்றுக்கும் … Continue reading

Posted in ஆளுமை, இசை, கலாச்சாரம், நேர்காணல் | Tagged , , ,