Category Archives: வரலாறு

பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்

Posted in எதிர்வினைகள், கட்டுரை, கீதை, வரலாறு | Tagged , , , | Leave a comment

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 4 Comments

புனித தோமையர் ஓர் அறிமுகம்

இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தாமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தாமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரா யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்

கிறித்தவர்களால் தங்கள் மூலநூலாக ‘புனித பைபிள்’ என்று கொண்டாடப்பட்டு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் விவிலியம் உண்மையில் மிக நீண்ட வரலாறும், சீரற்ற வளர்ச்சிப்போகும் கொண்ட ஒரு சிந்தனை ஓட்டத்தை பதிவுசெய்துள்ள நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூல்கள் உருவாகி மொழியாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பலவாறாக தொகுக்கப்பட்டு. சுருக்கப்பட்டு. சேர்க்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று நமக்கு கிடைக்கும் … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 2 Comments

பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வரலாறு] ஆசிரியர்: ஜெயந்தி சங்கர் உயிர்ம்மை பதிப்பகம். விலை120 பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள காரணங்கள் சிலவற்றை முன்வைப்பார்கள். ஐரோப்பாவில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் கிறித்தவ தேவாலயத்தின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. அரேபியாவில் இஸ்லாமின் பங்கு இன்றும் அழுத்தமாகவே … Continue reading

Posted in சமூகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 1 Comment

சிறுகதையில் என்ன நடக்கிறது?

என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம். சென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை … Continue reading

Posted in சிறுகதை, முன்னுரை, வரலாறு | Tagged , , , | Leave a comment

பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்

மெர்வின் ஹாரிஸின் பசுக்கள்பன்றிகள் போர்கள் மற்றும் சூனியக்காரிகள் என்னும் கலாச்சாரப்புதிர்கள் என்ற நூல் வாசிப்பு. ஒரு வருடத்துக்கும் மேலாகவே எனக்கு ஒரு சிக்கல். நள்ளிரவில் செல்போனில் அழைப்பு வரும் .எடுத்தால் ஒரு கிராமத்துக்குரல், ”மொதலாளி லோடு வந்திருக்கு, சம்முகத்த வரச்சொல்லுங்க”நான் பொறுமையாக அது தவறான எண் என்று சொல்லி விளக்குவேன்.”சரிங்க மொதலாளி, லோடை எறக்கிரலாமா? முந்நூத்தெட்டு … Continue reading

Posted in தமிழகம், மதம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 2 Comments

சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்

சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974] தென்னாட்டு பாளையக்காரர்களைப்பற்றி நம்நாட்டினர் யாராவது சுதந்திரத்துக்குப் பின்னர் நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்களா என வரலாற்றுப் … Continue reading

Posted in கட்டுரை, தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)

மதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018 மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் … Continue reading

Posted in கட்டுரை, தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 4 Comments

சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்

[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ] திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம். நுட்பமான தகவல்கள் செறிவாக … Continue reading

Posted in தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 2 Comments