Category Archives: சிறுகதை

வெண்கடல்-கடிதங்கள்

.அன்பின் ஜெ எம்., வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ..! … Continue reading

Posted in எதிர்வினைகள், சிறுகதை | Tagged

சோற்றுக்கணக்கு- ஒலிவடிவம்

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அறம் வரிசைக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வலுவான கோட்பாடுகளையும், மனித வாழ்வின் Humbleness ஐயும் ஒரு சேர என்னில் உணர வைத்த படைப்புக்கள். மிகவும் ஆக்கபூர்வமானவை. வாசிக்கும் பழக்கம் உடையவர்களை மட்டுமல்லாது, இன்னும் பல தளங்களை சென்றடைய வேண்டும் என முயன்றதே இந்த ஒலிவடிவம்ஏற்கனவே முயன்றது போல, இம்முறை … Continue reading

Posted in இலக்கியம், சிறுகதை | Tagged ,

வெண்கடல்- கடிதங்கள்

ஜெவின் சில கதைகள் போல இந்தக் கதையிலும் ஆண்கள் உணர்ந்து கொள்ள முடியாத பெண்ணின் வலி, தாய்மை போன்றவை வருகின்றன என்று நினைத்தேன். ஆனால் அது மட்டும் கதையல்ல என்றும் தோன்றுகிறது. முதலில் இந்தக்கதையிலும் creativity பற்றிய கேள்வியையே ஜெ தொடர்கிறார் என்று தோன்றியது. (பெண் சிருஷ்டியின் குறியீடு. எங்கிருந்தோ சுரக்கும் வெண்கடலை அந்தப் பெண், … Continue reading

Posted in இலக்கியம், எதிர்வினைகள், சிறுகதை | Tagged

திருமுகப்பில்-கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு “ திருமுகப்பில்” வாசித்தேன். ஆதிகேசவனை சேவித்தேன். நன்றி. ப்ரம்மாண்டத்தை சேவித்து ப்ரமித்துப் போனேன். இப்படியும் ஆதிகேசவனை உணர வைத்ததற்கு நமஸ்காரம் கோடி. அந்தக் கைகளாலும், ஒடியும் கேசவனின் நீளத்தைப் புரிய வைக்க முயன்றதைப் படித்து ஆதிகேசவனும் சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அளக்க முடியுமா அவனை? முடியாது என்பதை காளிசரன் புரிந்து … Continue reading

Posted in இலக்கியம், எதிர்வினைகள், சிறுகதை | Tagged

‘நூஸ்’

நகைச்சுவை நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் முடியும்போது சமயங்களில் கடவம் நிறைந்திருக்கும். நேராக அந்திச்சந்தைக்குப் போய் அவற்றை விற்று … Continue reading

Posted in சிறுகதை, நகைச்சுவை | Tagged , | Leave a comment

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதெ நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, சிறுகதை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | Leave a comment

சிறுகதையில் என்ன நடக்கிறது?

என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம். சென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை … Continue reading

Posted in சிறுகதை, முன்னுரை, வரலாறு | Tagged , , , | Leave a comment

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

இரண்டு பின் நவீனத்துவக் கதைக்கோட்பாடுகள் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளைப் படிக்கையில் நம் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று: நவீனத்துவம் முடியும்போது எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன, ஆகவே இனி சொல்லபப்ட்ட கதைகளை திருப்பிச் சொல்வதும் கதைகளைக் கொண்டு விளையாடுவதும் மட்டுமே இலக்கியத்தில் சாத்தியம். இரண்டு: வடிவ உறுதி கொண்ட ஒரு கதை ஒரு மையத்தைச் சுற்றியே அந்த இறுக்கத்தை … Continue reading

Posted in சிறுகதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 2 Comments

ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை :கிரிதரன் ராஜகோபாலன்

————— முதல் பகுதி ————— இந்த கட்டுரை ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம். பின்புலம் ——— இந்த சிறுகதைகள் பின்நவீனத்துவமும் புதிய முயற்சி எழுத்துகளும் தளும்பிய காலத்தில் எழுதப்பட்டது .ஆனால் பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டவை அல்ல.கதை சொல்லும் உத்வேகமே இதன் யுத்தி.இந்த பின்புலத்தை புரிந்துகொள்வது எழுத்தாளனுக்கும் … Continue reading

Posted in சிறுகதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | Leave a comment

இரு கலைஞர்கள்

ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது ‘மன்ற’த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் பட்ட பழைய உருப்படிகள். வலதுபக்கம் முனையில் தன் நாற்காலியில் அவர் பின்மதியம் மூன்று மூன்றரை வாக்கில் … Continue reading

Posted in சிறுகதை | Tagged | 2 Comments