Category Archives: வாசிப்பு

சதுரங்க ஆட்டத்தில்

”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் … Continue reading

Posted in அனுபவம், ஆளுமை, வாசிப்பு | Tagged , , , | Leave a comment

தமிழினி இரண்டாமிதழ்

தமிழினி மாத இதழின் இரண்டாவது இலக்கம் வெளிவந்திருக்கிறது. வழக்கமாக சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் அதிகமில்லாமல் வேறு ஒரு வகையான எழுத்தாளர்கள் எழுதுவதனால் ஒரு தனித்துவம் தெரியக்கூடிய இதழாக உள்ளது இது. இதழில் சிறப்புக் கட்டுரை என்று குமரிமைந்தன் எழுதிய ‘தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்’ ஐத்தான் சொல்லவேண்டும். தமிழருக்கு தொன்மையானதும் தனித்துவமானதுமான ஒரு வானியல் இருந்தது … Continue reading

Posted in வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | 3 Comments

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 4 Comments

தமிழ்நேயம்-31.'கொற்றவை' சிறப்பிதழ்

மார்க்ஸிய அறிஞரும் தமிழியக்கவாதியுமான ‘ஞானி’ வெளியிட்டுவரும் ‘தமிழ்நேயம்’ தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் ‘கொற்றவை’ புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. [ஜெயமோகன்: ‘கொற்றவை’ படைப்பும் பார்வையும்] ”ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கண்ணகி பற்றிய கதை உருவாகி நாளடைவில் தமிழ் சமூகத்தின் தேவைகள் … Continue reading

Posted in வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும் அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களாக் காட்சிகள் வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூ·பி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி … Continue reading

Posted in இலக்கியம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 1 Comment

ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரியமுறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் … Continue reading

Posted in இலக்கியம், நகைச்சுவை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 2 Comments

தமிழினி மாத இதழ்

பதிப்பகங்களில் தமிழினிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் ஆசிரியர் வசந்தகுமாரின் தனிப்பட்ட ரனையின் தேர்வில் தேறிய படைப்புகளே அதில் நூலாக வெளிவருகின்றன. ஆகவே தமிழினி நூல்கள் மேல் வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமுள்ளது. தமிழில் தொடர்ச்சியாக புதிய எழுத்தாளர்களை கண்டெடுப்பதும் அறியப்படாத முக்கியமான எழுத்தாளர்களை மீட்டு முன்னிலைப்படுத்துவதும் தமிழினியின் பணிகளாக எப்போதும் இருந்துவருகின்றன தமிழினி பதிப்பக … Continue reading

Posted in அறிவிப்பு, வாசிப்பு | Tagged , | 2 Comments

முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் 'முட்டம்'

‘பெரிய விஷயங்களை மட்டும் சொல்பவர்கள் கூர்மையற்ற பார்வையுடையவர்கள்’ என்பது இலக்கியத்தின் பொன்விதிகளில் ஒன்று. எழுத தொடங்குபவர்கள் அனேகமாக அனைவருக்கும் தென்படும் விஷயங்களை ஆர்ப்பாட்டமான நடையில் சொல்வார்கள்.எல்லார் கண்ணுக்கும் பட்டு ,எவருமே சொல்லாதவற்றைச் சொல்வதே மேலான இலக்கியம் என்ற புரிதலை அவர்கள் வந்தடைய நாளாகும். மிக தற்செயலாக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது சிரில் அலெக்ஸின் இந்த இணைய … Continue reading

Posted in முன்னுரை, வாசிப்பு | Tagged , | 1 Comment

கவிதையின் அரசியல்– தேவதேவன்

எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய … Continue reading

Posted in அரசியல், ஆன்மீகம், ஆளுமை, கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | Leave a comment

அலையறியா கடல்:சாங்கிய யோகம்

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க … Continue reading

Posted in ஆன்மீகம், கீதை, வாசிப்பு | Tagged , | Leave a comment