Category Archives: முன்னுரை

முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் 'முட்டம்'

‘பெரிய விஷயங்களை மட்டும் சொல்பவர்கள் கூர்மையற்ற பார்வையுடையவர்கள்’ என்பது இலக்கியத்தின் பொன்விதிகளில் ஒன்று. எழுத தொடங்குபவர்கள் அனேகமாக அனைவருக்கும் தென்படும் விஷயங்களை ஆர்ப்பாட்டமான நடையில் சொல்வார்கள்.எல்லார் கண்ணுக்கும் பட்டு ,எவருமே சொல்லாதவற்றைச் சொல்வதே மேலான இலக்கியம் என்ற புரிதலை அவர்கள் வந்தடைய நாளாகும். மிக தற்செயலாக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது சிரில் அலெக்ஸின் இந்த இணைய … Continue reading

Posted in முன்னுரை, வாசிப்பு | Tagged , | 1 Comment

சிறுகதையில் என்ன நடக்கிறது?

என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம். சென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை … Continue reading

Posted in சிறுகதை, முன்னுரை, வரலாறு | Tagged , , , | Leave a comment

கண்ணீரைப் பின்தொடர்தல்

குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற தொடரை அதில் எழுதினேன். இணையத்தின் வசதிக்கேற்ப மிகச்சுருக்கமான வடிவமே அதில் வெளிவந்தது. அக்கட்டுரைகளின் முழுவடிவம் இந்நூல். இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. … Continue reading

Posted in இலக்கியம், முன்னுரை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 1 Comment

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற … Continue reading

Posted in ஆன்மீகம், தத்துவம், முன்னுரை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 4 Comments

கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் '

இலக்கியப் படைப்புகளை அவற்றின் உருவாக்க முறையை ஒட்டி இருவகையாகப் பிரிக்கலாம். 1. வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை நேரடியாகப்பெற்று நேரடியாகவே பதிவுசெய்யும் ஆக்கங்கள். 2. கேட்டறிந்த அல்லது வாசித்த கதைகளில் இருந்து கற்பனையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு அவற்றை பலவாறாக உருமாற்றியும் பின்னியும் மறுபுனைவு செய்யும் ஆக்கங்கள். பொதுவாக நாம் முதல்வகை ஆக்கங்களையே மேலானவை என்று நம்ப பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம். … Continue reading

Posted in முன்னுரை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 3 Comments

ஜோ டி குரூஸின் ' ஆழிசூழ் உலகு ' – கடலறிந்தவையெல்லாம்…

தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார். தற்செயலாக சில கவிதைகளுடன் தமிழினி வசந்தகுமாரை அவர் காணவந்தார். கவிதைகள் நவீனக் கவிதையின் மாற்றங்களை உணராதவையாக இருந்தன. … Continue reading

Posted in இலக்கியம், கலாச்சாரம், முன்னுரை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , , , | Leave a comment

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் இலக்கிய இடம் ====================== தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக … Continue reading

Posted in அறிவியல் புனைகதை, ஆளுமை, கட்டுரை, முன்னுரை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 2 Comments

சாக்கியார் முதல் சக்கரியா வரை

1 மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், … Continue reading

Posted in இலக்கியம், முன்னுரை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 1 Comment

வாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…

Posted in அரசியல், இலக்கியம், சமூகம், தத்துவம், முன்னுரை, வரலாறு | Tagged , , , , , , | 1 Comment