Category Archives: கவிதை

கடுங்குளிர் கவிதைகள்- 1

எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது. அதன் குளிர்ந்த நாக்கு எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது. அதன் குளிர்ந்த மூச்சு அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது. உள்ளே ஓலங்கள் உயிரின் குருட்டு வெறி தினம் அதுகாண்பது அக்காட்சி. மரணம் ஒரு பெரும் பதற்றம் என அது அறிந்தது. எனவே வாழ்வு ஒரு … Continue reading

Posted in இலக்கியம், கவிதை | Tagged ,

சென்னையில்….

சில நாட்களாக பயணம். சென்னை வந்தேன். சென்னை பல்கலையில் எல்லைதாண்டிய நுண்ணுணர்வுகள் என்று ஒரு கருத்தரங்கு. நான் மலையாளக் கவிதைகளை மொழியாக்கம் செய்வது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிப்போய் வழக்கம் போல சொற்பொழிவாகப் பேசினேன். நண்பர் ஷாஜி மலையாள தமிழ் திரைப்பாடல்களின் இயல்பு குறித்து ஒப்பீட்டு நோக்கில் பேசினார். பொதுவாக இம்மாதிரி கூட்டங்களில் நிகழ்வதுபோல சோர்வூட்டும் … Continue reading

Posted in அனுபவம், கவிதை | Tagged , | Leave a comment

தேவதேவன் கருத்தரங்கம்

இவ்வருடத்தைய விளக்கு விருது பெற்ற கவிஞர் தேவதேவனைப்பற்றி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் ஏற்பாடுசெய்யபப்ட்டுள்ளது. நாள் 30-1-2008. இடம் அருள் கௌசானல் அரங்கம். காலை 9.30 மணி ‘கவிதையின் அரசியல்-தேவதேவன்’ என்னும் தலைப்பில் ஜெயமோகன் பேசுகிறார். ச.தமிழ்ச்செல்வன் [முற்போக்கு எழுத்தாளர் சங்கம்] ‘தேவதேவன் சிறுகதைகள்’ என்ற தலைப்பிலும் , நாவலாசிரியர் எம் … Continue reading

Posted in அறிவிப்பு, கவிதை, நிகழ்ச்சி | Tagged , , , | 1 Comment

கவிதையின் அரசியல்– தேவதேவன்

எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய … Continue reading

Posted in அரசியல், ஆன்மீகம், ஆளுமை, கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | Leave a comment

தேவதேவனின் கவிதையுலகம்

தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . முற்றிலும் ஆரவாரமற்ற , எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த , இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ , மற்றவர்களிடம் உரையாடவோ முடியாத ஒரு விசித்திரமான அந்தரங்கத் தன்மை உடையவர் . குறிப்பாகச் சொல்லப்போனால் … Continue reading

Posted in கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | Leave a comment

அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்

Posted in கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்:இகாரஸ் பிரகாஷ்

தமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன் சிக்கல்களை நானும் உணர்ந்திருக்கிறேன். ஸ்பெஷல் மசாலா தமிழில் எழுதப்பட்ட ஒரு சங்கப்பாடலைப் படிக்க, ஸ்பெஷல் சாதா அல்லது சாதா தமிழில் புரிந்து கொள்ள … Continue reading

Posted in இலக்கியம், கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | Leave a comment

நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்

டி.கே.சி.யின் வட்டத்தொட்க் கூட்டங்களைப்போலவும் சுந்தர ராமசாமியின் காகங்கள் கூட்டங்களைப்போலவும் ஜெயமோகன் முன்னின்று நடத்திவரும் நித்யா கவிதை ஆய்வரங்கங்கள் தமிழ்ச்சூழலில் ஆரோக்கியமான விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன. முக்கியமாக, கவிதைகளை அணுகும் பார்வைகளை வளர்த்தெடுக்கிற முறையைச் சொல்லவேண்டும். ஒரு கவிதையை முன்வைத்து, ஆய்வரங்கில் பங்கேற்கும் கவிஞர்களும் வாசகர்களும் சுதந்தரமாக பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களைப் புதுசாக பார்க்கிற அல்லது கேட்கிற பார்வையாளன் கவிதையின் … Continue reading

Posted in கவிதை, நிகழ்ச்சி, மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 1 Comment

பி. ராமன் கவிதைகள்

1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின் கனத்தை நான் அறியத் தொடங்கினேன் இல்லாத துயரத்தின் கனம் நீண்டு நிமிர்ந்து நிற்கும்போதுள்ள இந்தக் கூனல். அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப்படும் கதிர் குலைகள் போன்றது இல்லாத … Continue reading

Posted in கவிதை, மொழிபெயர்ப்பு | Tagged , | Leave a comment

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

கவிதையின் இரு அடிப்படை அம்சங்கள் எந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும். ஒன்று அதன் பொதுத்தன்மை இன்னொன்று அதன் தனித்தன்மை. பொதுத்தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம். ஒரு கவிதை மொழி பெயர்க்கப்படும் போது உலகம் முழுக்க அனைவருக்குமே அதன் சாரமான ஒரு பகுதி புரிகிறது, இதுவே கவிதையின் பொதுஅம்சம். … Continue reading

Posted in கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு | Tagged , , | Leave a comment