Category Archives: கட்டுரை

பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்

Posted in எதிர்வினைகள், கட்டுரை, கீதை, வரலாறு | Tagged , , , | Leave a comment

அய்யா பெரியார் -கை.அறிவழகன்

“கை.அறிவழகன்.”  to me show details  Feb 21 (1 day ago)   அன்புக்குரிய நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் கடிதம் படித்து அதில் உள்ள நுண்ணிய சில செய்திகளை அறிந்தேன், உங்கள் அழகான விளக்கக் கடிதத்துக்கு நன்றி… நான் உங்களுடன் விவாதம் செய்வதற்காக அந்த கடிதத்தை எழுதவில்லை, அதற்கான தகுதியும் எனக்கு இல்லை என்றே … Continue reading

Posted in கட்டுரை, கலாச்சாரம் | Tagged , , , | Leave a comment

விகடனை எண்ணும்போது…

அன்புள்ள ஜெயமோகன் .. விகடன் செய்தியின் விளைவுகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்? ராஜேந்திரபிரசாத் அன்புள்ள ராஜேந்திரபிரசாத் இதுவரை கிட்டத்தட்ட முந்நூறு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சாதாரணமாக ஒருநாள் ஆயிரம்பேர் பார்க்கும் இந்த தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை ஆறுமடங்கு பெருகியிருக்கிறது. நேற்று மட்டும் 5613., இன்று மதியம் ஒருமணி வரை 3148. பெரும்பாலும் எல்லா … Continue reading

Posted in அனுபவம், அரசியல், கட்டுரை | Tagged , | 1 Comment

ஆதிமூலம் நினைவிதழ்

தமிழ் சிற்றிதழுலகில் சுந்தர ராமசாமிக்கு உரிய இடம் ஆதிமூலத்துக்கும் ஒருவகையில் உண்டு. எழுபதுகளில் சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து அவை மட்டுமே அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு உரிய ஒரே தளம் என்ற நிலை இருந்தபோது அவற்றின் முன்னுதாரணர்களாக இருவரும் இருந்தார்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவரை இன்னொருவர் எப்போதும் நினைவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.சிற்றிதழ்சார்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் ஒர் இளம் … Continue reading

Posted in ஆளுமை, கட்டுரை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | Leave a comment

திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்

திராவிட இயக்கமும், இந்துத்வா இயக்கமும் இந்த நாட்டின் இயற்கையான வெளிப்பாடுகள். இந்த வரலாற்று சமூக சூழ்நிலையின் வெளிப்பாடுகள். இது போன்றதொரு பண்பாட்டு அடிப்படைவாதம் வேறு நாடுகளில் தோன்றியிருக்க்கலாம், ஆனால், இங்கே தோன்றியதன் காரணமும், அதன் பரிமாணங்களும், அதன் நீட்சிகளும் வேறானவை. அவற்றை ஒற்றை பரிமாணத்தில் அடைக்கவே இப்படிப்பட்ட மேற்கத்திய “காப்பி” என்ற அடைச்சொல் உதவும். துகாராம் … Continue reading

Posted in எதிர்வினைகள், கட்டுரை, கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், மதம் | Tagged , , , ,

திருவாரூர் பயணம்– அரசுப் பேருந்து

திருவாரூரில் என் மாமனார் உயர்திரு சற்குணம்பிள்ளை அவர்கள் புதுவீடு கட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே பட்டுக்கோட்டையில் இருந்த வீட்டை விற்றுவிட்டு. என் மனைவி மூன்றுநாள் முன்னதாகவே போய்விட்டாள். நானும் பையனும் ஒன்பதாம் தேதி போய் பத்தாம் தேதி இறங்கினோம். போகும்போது யூனிவர்சல் நிறுவனத்தின் தனியார் பேருந்து. நாகர்கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்குப் போவது. பெரிய காற்றணைப் பேருந்து. ஆகவே கட்டணம் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை | Tagged | Leave a comment

''சார் பெரிய ரைட்டர்!''

பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ”சார்!” என்றார். நானும் ”சார்?” என்றேன். ”சார்—” என்றார். ”சார் –?” என்றேன். ”நான் அருணாச்சலம் சார்… எல்லைஸியிலே இருக்கேன்” ”நான் பீயெஸ்ஸென்னெல்லிலே”. ”ஓகே சார்” என்று … Continue reading

Posted in கட்டுரை, நகைச்சுவை | Tagged | 3 Comments

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

தமிழ் சினிமாவில் இது ஒரு பொற்காலம். பொற்காலம் என்றால் வருடத்தில் ஐந்து படங்களாவது யதார்த்தமாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் அமைவது. இதற்கு முக்கியமான காரணம் இன்று ஒரு நல்ல திரைக்கரு அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தொடர்ச்சியாக இளம் இயக்குநர்கள் உள்ளே வர முடிகிறது. இரண்டுவருடங்களுக்குள் தமிழ் திரைப்படத்தின் அமைப்பிலும் நோக்கிலும் ஏதேனும் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதை … Continue reading

Posted in கட்டுரை, திரைப்படம் | Tagged , | Leave a comment

என்ன என்ன வார்த்தைகளோ!

‘ஜெயமோகன் புள்ளி உள்ளே’ என்ற என் இணையதளத்தைப்பார்த்துவிட்டு வரும் வாசகர் கடிதங்கள் பலவகை. அன்பார்ந்த நக்கல்கள் முதல் பகுப்பு. ‘மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும் என்பது நீங்கள் குடும்பத்துடன் காட்டுக்குபோன அனுபவமாக இருக்கும் என்று நினைத்து படித்தேன்’ என்று ஒரு கடிதம். அருண்மொழியை புலி என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் குட்டிகளை அப்படி … Continue reading

Posted in எதிர்வினைகள், கட்டுரை, நகைச்சுவை | Tagged , , | Leave a comment

நாவல் – ஒரு சமையல்குறிப்பு

Posted in இந்தியா, கட்டுரை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | 1 Comment