Category Archives: திரைப்படம்

தேனியில்…

‘நான்கடவுள்’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ”வாங்க, வந்து ஒரு நாலுநாள் ஜாலியா இருந்துட்டுப் போங்க” என்றார் பாலா. இரண்டு மலைகளில் கோயில் அரங்குகளை கிருஷ்ணமூர்த்தி அமைத்திருக்கிறார். எது கல்மண்டபம் எது தக்கை என்று கண்டுபிடிக்க முடியாது. கல் என நினைத்து சாய்வது தக்கையாக இருப்பதும் தக்கை என ஓங்கி குட்டி கல்லில் கை … Continue reading

Posted in அனுபவம், திரைப்படம், நகைச்சுவை | Tagged , , | 1 Comment

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

தமிழ் சினிமாவில் இது ஒரு பொற்காலம். பொற்காலம் என்றால் வருடத்தில் ஐந்து படங்களாவது யதார்த்தமாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் அமைவது. இதற்கு முக்கியமான காரணம் இன்று ஒரு நல்ல திரைக்கரு அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தொடர்ச்சியாக இளம் இயக்குநர்கள் உள்ளே வர முடிகிறது. இரண்டுவருடங்களுக்குள் தமிழ் திரைப்படத்தின் அமைப்பிலும் நோக்கிலும் ஏதேனும் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதை … Continue reading

Posted in கட்டுரை, திரைப்படம் | Tagged , | Leave a comment

திரையும் சமரசமும்- ஒரு கடிதம்

தங்கள் “இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்” பார்த்தேன். “நான் கடவுள்” திரைப்படத்திற்கு வசனம் அமைப்பது வணிக இதழ்களுக்கு எழுதுவதற்கு ஈடானது தானே? மேலும் சமரசங்கள் அதிகமாக கூட செய்ய வேண்டி இருக்குமே? அது நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றா? உங்கள் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அன்புடன் முருகேஷ் அன்புள்ள முருகேஷ் இன்றைய சூழலில் தமிழில் … Continue reading

Posted in எதிர்வினைகள், திரைப்படம் | Tagged , , | 3 Comments

நாட்டியப்பேர்வழி

சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது?”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக … Continue reading

Posted in ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை | Tagged , | Leave a comment

பப்படம்

கன்யாகுமரிமாவட்ட எழுத்தாளர்களில் நான் நாஞ்சில்நாடன் தோப்பில் முமமது மீரான் ஆகியோரின் எழுத்துகக்ளை படிப்பவர்களுக்கு மூவரும் மூன்று தேசத்தவர்களாகத் தோன்றலாம். நாஞ்சில் மருதம், நான் குறிஞ்சியும் முல்லையும் என்றால் தோப்பில் நெய்தல். இருபது கிலோமீட்டர் நீளமும் பதினைந்து கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சின்ன நிலப்பகுதியில் எல்லாவகையான நிலங்களும் உண்டு– பாலையைத்தவிர. இதில் நாஞ்சில்நாடு பண்பாட்டால் அதிகமும் … Continue reading

Posted in திரைப்படம், நகைச்சுவை | Tagged , , | Leave a comment

கனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி'

திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார். பத்துவருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையான அணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களே இல்லாத நேரடியான இந்த உணர்ச்சிவெளிப்பாட்டை ஏன் … Continue reading

Posted in அனுபவம், திரைப்படம், விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 2 Comments

ஒளிக்குழந்தை

பழனிக்கு படப்பிடிப்புக்கு இடம்பார்க்க ஒளிப்பதிவாளருடன் வரப்போவதாக சுரேஷ் சொன்னார். நான் நாகர்கோயிலில் இருந்து போனேன். காலையில் போய் இறங்கியபோது விடுதியிலிருந்து இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சுரேஷ் அருகே நின்ற கரிய பெரிய மனிதரை காட்டி ”காமிராமேன் ஆர்தர் வில்சன்” என்றார். நான் தயக்கத்துடன் கைநீட்டி, ”ஹலோ” என்றேன். உதடு மட்டும் சற்றே விரிய கனத்த கரங்களை நீட்டி … Continue reading

Posted in அனுபவம், ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை | Tagged , , | 1 Comment

ஆனந்த விகடன் பேட்டி 2007

கேள்வி : தமிழ்ல முக்கியமான எழுத்தாளரா, நிறைய எழுதுற எழுத்தாளரா அறியப்பட்டுள்ளவர் நீங்க. ஆனா இப்ப ஒரு வருஷமா எழுதறத நிறுத்திட்டீங்க. ஏன்? கடைசியா வந்த ‘கொற்றவை’ நாவலை மூணுவருஷமா எழுதிட்டிருந்தேன். அந்த நடையைப் பாத்தீங்கன்னா தெரியும். ரொம்ப கவித்துவமான உருவகநடை. தனித்தமிழ். அதாவது சிலப்பதிகாரத்தில இருக்கிற வடமொழி வார்த்தைகளைக்கூட தமிழாக்கம் செஞ்சு எழுதிய நாவல். … Continue reading

Posted in ஆளுமை, திரைப்படம், நேர்காணல் | Tagged , , | 3 Comments

கேள்வி பதில் – 69

கண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார்? பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா? பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா? நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன்? என்றாலும் இப்பொழுதும் திரைப்பாடல்களில் பாரதியின் பாடல்கள் எந்த … Continue reading

Posted in இசை, கேள்வி பதில், திரைப்படம் | Tagged , , | Leave a comment

கேள்வி பதில் – 25

நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவதை வரவேற்கிறீர்களா? எழுத்தாளர்கள்தாம் தமிழ்த்திரைப்படத்தை வேறு நல்ல புதிய தளத்திற்குப் பெயர்க்கக்கூடியவர்கள் என்கிற கருத்துச் சொல்லப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா? — ஹரன்பிரசன்னா. திரைப்படம் என்பது இலக்கியமல்ல. அது ஓவியம், புகைப்படம், நாடகம், இசை ஆகிய கலைகளின் கலவையாலான நவீன கலை. அதில் உள்ள நாடக அம்சத்தில் ஒருபகுதியாக இலக்கியம் உள்ளது. ஒரு திரைப்படத்தில் … Continue reading

Posted in கேள்வி பதில், திரைப்படம் | Tagged , | Leave a comment