Category Archives: தமிழகம்

பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்

மெர்வின் ஹாரிஸின் பசுக்கள்பன்றிகள் போர்கள் மற்றும் சூனியக்காரிகள் என்னும் கலாச்சாரப்புதிர்கள் என்ற நூல் வாசிப்பு. ஒரு வருடத்துக்கும் மேலாகவே எனக்கு ஒரு சிக்கல். நள்ளிரவில் செல்போனில் அழைப்பு வரும் .எடுத்தால் ஒரு கிராமத்துக்குரல், ”மொதலாளி லோடு வந்திருக்கு, சம்முகத்த வரச்சொல்லுங்க”நான் பொறுமையாக அது தவறான எண் என்று சொல்லி விளக்குவேன்.”சரிங்க மொதலாளி, லோடை எறக்கிரலாமா? முந்நூத்தெட்டு … Continue reading

Posted in தமிழகம், மதம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 2 Comments

சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்

சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974] தென்னாட்டு பாளையக்காரர்களைப்பற்றி நம்நாட்டினர் யாராவது சுதந்திரத்துக்குப் பின்னர் நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்களா என வரலாற்றுப் … Continue reading

Posted in கட்டுரை, தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)

மதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018 மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் … Continue reading

Posted in கட்டுரை, தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 4 Comments

சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்

[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ] திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம். நுட்பமான தகவல்கள் செறிவாக … Continue reading

Posted in தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 2 Comments

சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜே.எச்.நெல்சன்)

[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989] இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப்புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்துவருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில் இப்பதிவுகளை தொகுத்து ஆவணநூல்களாக[manual] மாற்றும் பணியை அதிகாரிகள் … Continue reading

Posted in தமிழகம், வரலாறு, வாசிப்பு | Tagged , , | Leave a comment

நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்

  ஒன்று    இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா?   மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது. காரணம் நாம் நீதி என்பது நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து என்று எண்ணும்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். நீதி என்பது நம் முன்னோர் … Continue reading

Posted in இலக்கியம், கலாச்சாரம், சமூகம், தமிழகம், வரலாறு, வாசிப்பு | Tagged , , , , | 2 Comments

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ”என் பெண் வருகிறாள்” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில், ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத … Continue reading

Posted in அனுபவம், கலாச்சாரம், தமிழகம் | Tagged , , | Leave a comment

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி … Continue reading

Posted in இலக்கியம், கலாச்சாரம், தமிழகம், மதம், வரலாறு | Tagged , , , | 1 Comment

அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!

கன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப் பட்ட போது என் மாமனார், தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார். அய்யன் திருமுகத்தை முதல் நாளே பார்க்க வேண்டுமென்று திறப்பு விழாவுக்குப் போனார். நெரிசலில் சிக்கி, மூச்சு திணறி வந்து சேர்ந்த போது முகம் இருளடித்துக் கிடந்தது. காரணம் நான் கேட்கவில்லை. கேட்பேன் என்று எதிர்பார்த்து ஏமாந்து அவரே … Continue reading

Posted in கட்டுரை, சமூகம், தமிழகம், நகைச்சுவை | Tagged , , | Leave a comment

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை , விஜய நகர ஆதிக்க கால கட்டத்தில் மறு கண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன் வைக்கப் பட்டது. காலப் போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப் … Continue reading

Posted in ஆளுமை, இசை, தமிழகம், வரலாறு | Tagged , , , , , | Leave a comment