Category Archives: சமூகம்

சதுரங்க ஆட்டத்தில்

”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் … Continue reading

Posted in அனுபவம், ஆளுமை, வாசிப்பு | Tagged , , , | Leave a comment

நமது கைகளில்….

அன்புள்ள ஜெயமோகன், நானும், எனது மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமையன்று கிழக்கு அமெரிக்க நேரம் 3.43 க்கு ஒரு ஆண் மகவினை ஈன்றெடுத்தோம். ஆதர்ஷ் என்று பெயரிட்டுள்ளோம்.உங்களைப் போன்ற நல்லெழுத்தாளனின் ஆசி அம்மகவினை சான்றோனாக்கும் என்பது என் நம்பிக்கை. தங்கள் மேலான ஆசிகளை அவனுக்கு வழங்குங்கள்.இத்தருணத்தில் நீங்கள் ஏதேனும் அறிவுரையோ ,ஆலோசனையோ அல்லது கருத்தோ தெரிவிக்க விரும்பினால் … Continue reading

Posted in அனுபவம் | Tagged | 1 Comment

நிலமிலி

நிலம், குருதி என்றெல்லாம் படித்து வருகையில் சொத்து என்று ஒன்றுமே இல்லாமல் வாழும் ஒரு அமெரிக்கரைப்பற்றிய சுவாரஸ்ய செய்தி ஒன்றையும் படித்தேன். இவர் பெயர் டேனியல் சுயலோ. எவாஞ்சலிக கிறித்துவப் பின்னணி கொண்ட இவர், உலக நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்த தேடலின் முடிவில் கண்டடைந்தது எல்லா மதங்களும் வலியுறுத்துவது எளிய வாழ்க்கையையே என்பதைத்தான், இன்று … Continue reading

Posted in அனுபவம் | Tagged

தேனியில்…

‘நான்கடவுள்’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ”வாங்க, வந்து ஒரு நாலுநாள் ஜாலியா இருந்துட்டுப் போங்க” என்றார் பாலா. இரண்டு மலைகளில் கோயில் அரங்குகளை கிருஷ்ணமூர்த்தி அமைத்திருக்கிறார். எது கல்மண்டபம் எது தக்கை என்று கண்டுபிடிக்க முடியாது. கல் என நினைத்து சாய்வது தக்கையாக இருப்பதும் தக்கை என ஓங்கி குட்டி கல்லில் கை … Continue reading

Posted in அனுபவம், திரைப்படம், நகைச்சுவை | Tagged , , | 1 Comment

சென்னையில்….

சில நாட்களாக பயணம். சென்னை வந்தேன். சென்னை பல்கலையில் எல்லைதாண்டிய நுண்ணுணர்வுகள் என்று ஒரு கருத்தரங்கு. நான் மலையாளக் கவிதைகளை மொழியாக்கம் செய்வது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிப்போய் வழக்கம் போல சொற்பொழிவாகப் பேசினேன். நண்பர் ஷாஜி மலையாள தமிழ் திரைப்பாடல்களின் இயல்பு குறித்து ஒப்பீட்டு நோக்கில் பேசினார். பொதுவாக இம்மாதிரி கூட்டங்களில் நிகழ்வதுபோல சோர்வூட்டும் … Continue reading

Posted in அனுபவம், கவிதை | Tagged , | Leave a comment

பெரியார்-ஒருகடிதம்

அன்புள்ள நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, அறிவழகன் அன்புடன் எழுதுவது, தங்கள் மேலான கருத்து என்று ஒன்றை, ஒரு வார இதில் பார்த்தேன், ” தந்தை பெரியாரை நீங்கள் ஒரு தமிழினத் தலைவராக எற்றுகொள்வதில்லை என்று”. அய்யா,நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும் அவர் தமிழினத்தின் இணையற்ற தலைவர் தான், அவர் நேரடியாக தமிழுக்கும், தமிழர்க்கும் செய்த பணிகள் உங்கள் … Continue reading

Posted in ஆளுமை, எதிர்வினைகள், கேள்வி பதில், சமூகம் | Tagged , , | 1 Comment

விகடனை எண்ணும்போது…

அன்புள்ள ஜெயமோகன் .. விகடன் செய்தியின் விளைவுகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்? ராஜேந்திரபிரசாத் அன்புள்ள ராஜேந்திரபிரசாத் இதுவரை கிட்டத்தட்ட முந்நூறு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. சாதாரணமாக ஒருநாள் ஆயிரம்பேர் பார்க்கும் இந்த தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை ஆறுமடங்கு பெருகியிருக்கிறது. நேற்று மட்டும் 5613., இன்று மதியம் ஒருமணி வரை 3148. பெரும்பாலும் எல்லா … Continue reading

Posted in அனுபவம், அரசியல், கட்டுரை | Tagged , | 1 Comment

திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்

திராவிட இயக்கமும், இந்துத்வா இயக்கமும் இந்த நாட்டின் இயற்கையான வெளிப்பாடுகள். இந்த வரலாற்று சமூக சூழ்நிலையின் வெளிப்பாடுகள். இது போன்றதொரு பண்பாட்டு அடிப்படைவாதம் வேறு நாடுகளில் தோன்றியிருக்க்கலாம், ஆனால், இங்கே தோன்றியதன் காரணமும், அதன் பரிமாணங்களும், அதன் நீட்சிகளும் வேறானவை. அவற்றை ஒற்றை பரிமாணத்தில் அடைக்கவே இப்படிப்பட்ட மேற்கத்திய “காப்பி” என்ற அடைச்சொல் உதவும். துகாராம் … Continue reading

Posted in எதிர்வினைகள், கட்டுரை, கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், மதம் | Tagged , , , ,

திருவாரூர் பயணம்– அரசுப் பேருந்து

திருவாரூரில் என் மாமனார் உயர்திரு சற்குணம்பிள்ளை அவர்கள் புதுவீடு கட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே பட்டுக்கோட்டையில் இருந்த வீட்டை விற்றுவிட்டு. என் மனைவி மூன்றுநாள் முன்னதாகவே போய்விட்டாள். நானும் பையனும் ஒன்பதாம் தேதி போய் பத்தாம் தேதி இறங்கினோம். போகும்போது யூனிவர்சல் நிறுவனத்தின் தனியார் பேருந்து. நாகர்கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்குப் போவது. பெரிய காற்றணைப் பேருந்து. ஆகவே கட்டணம் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை | Tagged | Leave a comment

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

தமிழ் சினிமாவில் இது ஒரு பொற்காலம். பொற்காலம் என்றால் வருடத்தில் ஐந்து படங்களாவது யதார்த்தமாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் அமைவது. இதற்கு முக்கியமான காரணம் இன்று ஒரு நல்ல திரைக்கரு அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தொடர்ச்சியாக இளம் இயக்குநர்கள் உள்ளே வர முடிகிறது. இரண்டுவருடங்களுக்குள் தமிழ் திரைப்படத்தின் அமைப்பிலும் நோக்கிலும் ஏதேனும் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதை … Continue reading

Posted in கட்டுரை, திரைப்படம் | Tagged , | Leave a comment