Category Archives: ஆளுமை

சதுரங்க ஆட்டத்தில்

”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் … Continue reading

Posted in அனுபவம், ஆளுமை, வாசிப்பு | Tagged , , , | Leave a comment

பேராசிரியர் மௌனகுரு

ஈழ நாடகப்பேராசிரியர் மௌனகுரு மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து கேரளம் சென்று திருவனந்தபுரம் வழியாக என் வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டுநாள் என்னுடன் தங்கினார். குழந்தைகளுடன் சட்டென்று இணைந்துவிடும் பழக்கம் கொண்ட உற்சாகமான மனிதர் சில கணங்களிலேயே என் பிள்ளைகளுக்குப் பிடித்தமானவராக ஆனார். ”இவரா? நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்சேன்?”என்றான் அஜிதன். பேராசிரியர் சிறுவயதில் நடனமாடுவார் … Continue reading

Posted in ஆளுமை, பயணம் | Tagged , | 4 Comments

பெரியார்-ஒருகடிதம்

அன்புள்ள நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, அறிவழகன் அன்புடன் எழுதுவது, தங்கள் மேலான கருத்து என்று ஒன்றை, ஒரு வார இதில் பார்த்தேன், ” தந்தை பெரியாரை நீங்கள் ஒரு தமிழினத் தலைவராக எற்றுகொள்வதில்லை என்று”. அய்யா,நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும் அவர் தமிழினத்தின் இணையற்ற தலைவர் தான், அவர் நேரடியாக தமிழுக்கும், தமிழர்க்கும் செய்த பணிகள் உங்கள் … Continue reading

Posted in ஆளுமை, எதிர்வினைகள், கேள்வி பதில், சமூகம் | Tagged , , | 1 Comment

விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்

உங்களைப்பற்றிய விமரிசனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? அவை உங்களை பாதிக்கின்றனவா? அவற்றை வாசித்துப் பார்ப்பீர்களா? அல்லது just ignore செய்வீர்கள allwantspace அன்புள்ள நண்பருக்கு, நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் … Continue reading

Posted in ஆளுமை, எதிர்வினைகள் | Tagged , | 2 Comments

ஆதிமூலம் நினைவிதழ்

தமிழ் சிற்றிதழுலகில் சுந்தர ராமசாமிக்கு உரிய இடம் ஆதிமூலத்துக்கும் ஒருவகையில் உண்டு. எழுபதுகளில் சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து அவை மட்டுமே அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு உரிய ஒரே தளம் என்ற நிலை இருந்தபோது அவற்றின் முன்னுதாரணர்களாக இருவரும் இருந்தார்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவரை இன்னொருவர் எப்போதும் நினைவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.சிற்றிதழ்சார்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் ஒர் இளம் … Continue reading

Posted in ஆளுமை, கட்டுரை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | Leave a comment

ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ஆற்றூர் பற்றிய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை. ஒரு ஓணக் காலத்தில் தொலைபேசியிருக்கிறேன் – பொன் ஓண ஆஷம்சகள் நேர்ந்நபோது ‘மழயோணமா இவிடெ’ என்றார். அவரை ஜெ.ஜெ மாடலில் கற்பனை செய்திருந்தேன் 🙂 கல்பற்ற அவ்ருடைய மாணவர் என்பது புதிய செய்தி. அன்புடன் இரா முருகன் அன்புள்ள நண்பர் … Continue reading

Posted in ஆளுமை, எதிர்வினைகள் | Tagged , | Leave a comment

நாட்டியப்பேர்வழி

சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது?”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக … Continue reading

Posted in ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை | Tagged , | Leave a comment

இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்

1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ”…பேரு ஷாஜி தாமஸ்” என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில் ஏற்படும் பதற்றம் காணச்சகிக்கத்தக்கதல்ல. சிலர் தங்கள் செவித்திறனை நம்பாமல் ”மேசை விற்கிறாருஙகளா? எங்க?” என்றுகேட்டு ”…சார் ஆக்சுவலா இப்ப இந்த டபிள் … Continue reading

Posted in ஆளுமை, இசை, நகைச்சுவை | Tagged , , | 3 Comments

ஆதிமூலம்

ஆதிமூலத்தின் கோட்டு ஓவியங்களைப்பற்றிய என் அறிமுகம் சுமுகமானதாக இருக்கவில்லை. நுண்கலைகளில் நான் ரொம்பவும் நுண்மையானவன் — இருப்பதே தெரியாது. சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் தொகுப்பின் [முதல் பதிப்பு, க்ரியா] வடிவமைப்பு பற்றி என் கருத்தை சொன்னேன். ”அட்டையிலே எழுத்துக்களை அச்சடிச்சதில தப்பு வந்திட்டுது சார். லெட்டர்ஸ் கோணலா இருக்கு. பிளேட் சரியா போடல்லை”. சுந்தர … Continue reading

Posted in ஆளுமை | Tagged , | 1 Comment

கோணங்கி

கோணங்கியை நான் முதலில் சந்தித்தது– நீங்கள் எதிர்பார்ப்பது தப்பு, நள்ளிரவில் அல்ல. காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் மத்தியான நேரத்தில் ஒரு பழைய பையும் கல்கத்தா ஜிப்பாவுமாக வந்து எனக்காக காத்து நின்றிருந்தார். யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு நான் சென்றபோது தாடையில் மட்டும் சிமினி விளக்கின் புகைக்கரி மேலே சுவரில் படிந்திருப்பது போன்ற மென் தாடியுடன் … Continue reading

Posted in ஆளுமை, கட்டுரை, நகைச்சுவை | Tagged , | 2 Comments