அஞ்ஞாடி ஒரு கடிதம்

அஞ்ஞாடி வாசித்து கொண்டு இருக்கிறேன். நாவல் அபாரமான ஒரு வாசிப்பு அனுபவம்.
ஆண்டி மற்றும் மாறி என்று இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் இருந்து
தொடங்கும் நாவல். மெல்ல மெல்ல பல தளங்களில் விரிந்து செல்கிறது. நுட்பமான
வாழ்க்கை தருணங்கள் , கிராமிய வாழ்க்கையின் கிடைக்கும் அங்கதம்,
இயற்க்கை காட்சிகள், அபாரமான சொல்வடைகள். நாவல் முழுதும் லயிக்கும்
பாடல்கள், கவித்துவமான மொழியில் எழுதப்பட்டுள பாடல்கள்.

நாவலின் பலவீனம் அது மாக்ரோ வரலாருக்குள் செல்லும் இடங்கள் வெறும்
செய்தியாக மாறிவிடுகிறது . நாவலின் முர்ப்பகுதியில் தெரியும் மொழியின்
கவித்துவம் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.அந்த பகுதி வறண்டு
தெரிகிறது .

காவல் கோட்டம் முழுவதுமே மொழி மிகவும் சாதாரணமான மொழி . நாவலின் பலவீனம்
சாதரணமான வடிவம். அஞ்ஞாடி நாவலின் பலம் பூமணியின் அபாரமான மொழி,
வாழ்க்கை அனுபவம், எல்லாம் அஞ்ஞாடி ஒரு படி மேல் கொண்டு செல்கிறது .

அசோக் சாம்ராட்

அன்புள்ள அசோக்

நான் இன்னும் முடிக்கவில்லை

பூமனீ முதல் இருநூறு பக்கங்களில் அவருக்குரிய உலகில் அற்புதமான வீச்சுடன் வெளிபப்டுகிறார். ஆனால் வரலாற்றைச் சொல்லப்போகும்போது இரு பிழைகள். சம்பிரதாயமான இடதுசாரி வரலாற்றுச்சித்திரத்தை சம்பிரதாயமகாச் சொல்லிச் செல்கிறார். அதை மைய்க்கதையுடன் பிணைக்கவும் முடியவில்லை

ஜெ

This entry was posted in பொது. Bookmark the permalink.