அரவிந்தர்- இந்தியஞானம்

அன்புள்ள ஜெ,

அந்த குகைப்பயணம் எப்பேற்பட்ட ஒரு பேரனுவத்தை அனைவருக்கும் அளித்திருக்கும் என்றூ உணர முடிகிறது. கிருஷ்ணனின் அவதானிப்பு நுட்பமானது. திருமந்திரத்தின் ஒரு பாடலை நினைவில் எழ வைத்தது –

ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா
ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியிருள் கண்டகண் போல வேறாயுள
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே.

இந்திய ஞானம் பற்றிய அழகிய குறும்படம்.. முழுதும் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களின் அடிப்பையில் உருவாக்கப் பட்டிருக்கிறது, சாந்தமும் இனிமையும் ததும்பும் விஷுவல்கள், ஒலிக்கோவைகள். கண்டு மகிழுங்கள் –

The Genius of India

part 1 – http://www.youtube.com/watch?v=ocCeT8hKK2U

part 2 – http://www.youtube.com/watch?v=YBf3TY_P0uc

அன்புடன்,
ஜடாயு

This entry was posted in பொது. Bookmark the permalink.