விகடன் பற்றி இறுதியாக….

‘புலிநகக் கொன்றை’ ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன் பயனீர் ஆங்கில இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றை நண்பர் அனுப்பியிருந்தார். சுட்டி கீழே

ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.

http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=anantha%2Fanantha20%2Etxt&writer=anantha

என்னுடைய எண்ணம் இதிலிருந்து சற்றே மாறுபட்டது. இதுcவரை வசைகளும் கண்டனங்களும் பல வந்துள்ள போதிலும் பொதுவாக நம் சூழலில் இருந்து வந்த எதிர்வினை மிகவும் ஜனநாயகபூர்வமாகவே இருந்தது என்றே படுகிறது. திரைத்துறையும் சரி பல்வேறு ரசிகர் அமைப்புகளும் சரி நிதானமாகவே இப்பிரச்சினையை கையாண்டார்கள்.

பிரச்சினை நம் ஊடகங்களிலேயே என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. நம் மக்களை மூளையில்லாத கும்பலாக அணுகவே அவை ஆசைபப்டுகின்றன. விகடனின் எதிர்பார்ப்பும் கட்டுரையின் தொனியும் அதையே காட்டின

பொதுவாக இதழ்களின் தலையங்கம் அவ்விதழின் இதயம் என்பார்கள். நம் இதழ்களின் இதயங்கள் ஜனநாயகந் மனிதாபிமானம் என்ற லப்-டப் ஒலியில் இயங்குகின்றன. விகடனுக்கு இரட்டை இதயம்

ஆனால் விகடன் அதன் செயலைக் கண்டித்து வந்த எந்த கடிதத்தையுமே பிரசுரிக்கவில்லை என்பதை அதன் இணைய பக்கத்தை பார்த்தவர்களே உணரலாம். அவர்களின் பொறுப்பின்மையால் பாதிக்க்கப்பட்ட நான் எழுதிய நியாயமான மறுப்பைக்கூட பிரசுரிக்கவில்லை. சில வரிகளே இருந்தது அது. இவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். நீண்ட கடிதம் போட்டால் அதில் இருந்து சம்பந்தமில்லாத வரியை பிடிங்கி போட்டு இடமில்லாத காரணத்தால் சுருக்கினோம் என்பார்கள். அதை விட எழுத்தாளர்கள் சேர்ந்து அனுப்பிய கடிதத்தையும் போடவில்லை. அந்தக் கடிதம் திண்ணை இணைய தளத்தில் உள்ளது.

விகடனின் ஜனநாயகம் இதுவே. இத்தகைய ஊடகங்களால்தான் நம் கலாச்சாரச் சூழல் சிறுமைப்படுகிறது. சினிமாவால் அல்ல. அரசியலாலும் அல்ல என்று படுகிறது

This entry was posted in எதிர்வினைகள் and tagged , . Bookmark the permalink.

One Response to விகடன் பற்றி இறுதியாக….

  1. samyuappa says:

    ஒரு 15 வருடங்களுக்கு முன் விகடனில் – கல்லூரி கலாட்டா என்ற தொடர் வெளியானது. எங்கள் கல்லூரியின் “pharmacy week ” ஒரு வாரகால நிகழ்ச்சிகளுக்கு அழைத்திருந்தோம். அவற்றை தொகுத்து வெளியிட்டனர். அவற்றில் – நாங்கள் Organiser என்பதால் எங்கள் group photo வை தவிர மற்ற செய்திகள் அனைத்தும் பொய். பொய்..பொய்….

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s