<![CDATA[ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு தமிழினி ஜெயமோகனின் எட்டு நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் கடந்த 6. 10.03 அன்று நடைபெற்றது. பொதுவாக இந்நிகழ்ச்சி குறித்து இருந்த ஆர்வத்தை பிரதிபலிப்பதாக இருந்தது கூட்டம். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களுக்கு ஐம்பது முதல் அதிகபட்சம் நூறுபேர் வரை வருவதே வழக்கம். இக்கூட்டத்துக்கு ஏறத்தாழ இருநூற்றைம்பதுபேர் வந்திருந்தார்கள் .அத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காததனால் அநைவருக்கும் அமரவசதி செய்யமுடியாமல் போனது.’உயிரியக்கம் ‘ , ‘அப்பாவின் அத்தை ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதிய கி அ. சச்சிதானந்தம் தலைமை வகித்தார். தமிழினி வெளியீட்டகம் தன் பணியைதுவங்கி ஐந்து ஆண்டுகளே ஆகின்றது என்றபோதிலும் இன்று தமிழின் முக்கியமான வெளியீட்டகமாக ஆகியுள்ளது என்றார். இதுவரை 25 புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது என்பது ஒரு சாதனையே .என்று குறிப்பிட்டார்.’அப்படியே நிற்கட்டும் அந்தமரம் ‘ போன்ற கவிதை நூல்களையும் ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும் ‘ போன்ற விமரிசன நூல்களையும் எழுதிய ராஜமார்த்தாண்டன் வரவேற்புரை அளித்து பேச்சாளர்களை அறிமுகம் செய்தார். உடல்நலம் குன்றியிருந்தமையால் முதியவரான லா.ச.ராமாமிர்தம் வரவில்லை.முதலில் நூல்கள் வெளியிடப்பட்டன. ‘காடு ‘ நாவலை ஜெயகாந்தன் வெளியிட சோதிப்பிரகாசமும் ஆர் குப்புசாமியும் பெற்றுக் கொண்டார்கள். ஏழு விமரிசனநூல்களையும் ஒரு தொகையாக அசோகமித்திரன் வெளியிட கந்தர்வனும் க மோகனரங்கனும் பெற்றுக் கொண்டார்கள்.முதலில் பேசிய சோதிப்பிரகாசம் [மனதின் விடுதலை, வரலாற்றின் முரண் இயக்கம், திராவிடர் வரலாறு போன்ற நூல்களின் ஆசிரியர்] காடு நாவல் தன்னை பெரிதும் கவர்ந்ததாகச் சொன்னார். பலவருடங்களுக்கு முன் சிவகாமியின் ‘பழையன கழிதலும் ‘ என்ற நாவலைப் படித்த போது அதில் சொல்லப்பட்டுள்ள தலித் எழுச்சியின் சித்திரம் ஏன் அன்றுவரை தமிழில் எழுதப்படவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது என்றும் இப்போது இந்நாவலில் தலித்மெழுச்சியின் சித்திரமும் சாதி என்ற அமைப்பின் உள்ளீடற்ற அபத்தமும் திவிரமாக சொல்லப்பட்டுள்ளதைக் கண்டதாகவும் இது சிவகாமி உருவாக்கிய இலக்கிய அலையின் நீட்சியே என்றும் சொன்னார். திண்ணியம் மலம் ஊட்டு நிகழ்ச்சியை குறிப்பிட்டு அந்த மலம் நம் அனைவர் வாயிலும் ஊட்டப்பட்ட ஒன்றுதான் என்று பேசிய சோதிப்பிரகாசம் அந்த யதார்த்தத்தை மறைத்து அல்லது புறக்கணித்து யாரும் எழுதமுடியாது என்றார். இந்நாவல் நகைச்சுவையும் கவித்துவமும் கலந்த நடையில் மனதைக் கவரும்படி எழுதப்பட்டுள்ளது என்றார்.’உயிர்த்திரு ‘ என்ற கவிதை நூலை இயற்றியவரான ஆர்குப்புசாமி [ஆர்.கெ] காடு நாவல் நமது வளமான அகமரபின் நவீனகால நீட்சியாக உருவாகி வந்துள்ளது என்றார். குறிஞ்சிதிணையின் அழகையும் கவித்துவநுட்பங்களையும் காட்டும் நாவல் இது. அதன் பின்புலமாக குரூரமான வாழ்க்கையின் சித்திரம் உள்ளது. இரண்டையும் இணைத்தபடி வாழ்க்கையின் அடிப்படை என்ன என்ற தேடல் சென்றுகொண்டிருக்கிறது என்றார்.பல வருடங்கள் முன்பு சென்னை மாநகராட்சி தேர்தலில் ஜெயித்தபோது அண்ணாதுரை காட்டவேண்டியதைக் காட்டி பெறவேண்டியதை பெற்றோம் என சினிமா மூலம் வென்றதை குறிப்பிட்டார். அப்போது அதற்கு எதிராக எழுந்த தார்மீகக்குரலாக ஜெயகாந்தனின் சினிமாவுக்குப்போன சித்தாளு என்ற கதை வந்தது. எழுத்தாளனின் தார்மீகச்சார்பு சமூக அக்கறை எப்போதும் முக்கியமானது இதை ஜெயமோகன் கருத்தில் கொள்ளவேண்டும் என்றார். நம் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் பெரும் நாவல்கள் உண்டு. உலக இலக்கிய
த்தி]]
>
-
அண்மைய இடுகைகள்
மாதவாரியாக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- அனுபவம்
- அரசியல்
- அறிவிப்பு
- அறிவியல் புனைகதை
- ஆன்மீகம்
- ஆளுமை
- இசை
- இணையம்
- இந்தியா
- இயற்கை
- இலக்கியக் கலைச்சொல்
- இலக்கியம்
- உரையாடல்
- எதிர்வினைகள்
- கட்டுரை
- கலாச்சாரம்
- கவிதை
- காந்தி
- கீதை
- கேள்வி பதில்
- சமூகம்
- சிறப்புப் பகுதிகள்
- சிறுகதை
- தத்துவம்
- தமிழகம்
- திரைப்படம்
- நகைச்சுவை
- நிகழ்ச்சி
- நேர்காணல்
- படங்கள் காணொளிகள்
- பயணம்
- பொது
- மதம்
- முன்னுரை
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- வாசிப்பு
- விமரிசகனின் பரிந்துரை
சொல்புதிது குழுமம்
மதிப்பிடப்பட்டது