எதிர்வினைகள்

Test

This entry was posted in எதிர்வினைகள் and tagged . Bookmark the permalink.

34 Responses to எதிர்வினைகள்

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » அள்ளிப் பதுக்கும் பண்பாடு

  2. karhikesan says:

    அன்பு ஜெ,

    எந்‌த தொழிலிலும் / பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒருவருக்கு தனது பணியிலான தீவிரம் குறித்த ஐயம் அவ்வப்போது எழுவது இயல்பே. அத்தகைய சூழலில் அது குறித்தான சோதனைகளில் ஈடுபட்டு தன் நிலையை மீண்டும் ஸ்தாபித்துக் கொள்வதையே மனம் மிகவும் விரும்பும். இத்தகைய நிலை தங்களுக்கும் ஏற்பட்டிருப்பது ஆச்சர்யமானதல்ல. இது இலக்கிய பணியிலான தங்களது ஆர்வத்தையும் காதலையுமே காட்டுகிறது.

    மேலும், ஜெயமோகன் வாசகனுக்கு அவ்வப்போது அரிதாக தட்டுப்படுவதையே நான் விரும்புகிறேன். ஏனெனில் வாசகனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வாசகனை வஞ்சனையின்றி வைது தீர்க்கும் இயல்புடைய ஜெயகாந்‌தனுக்காக உருகும் மரபுடையவர்கள் நாங்கள்.

    தங்கள் இலக்கிய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  3. Dharmarajan says:

    ஊழலை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு

    பல ஆயிரம் கோடி ஊழல்கள் செய்த அரசியல்வாதிகளை நம் மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர் ஊழலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூட தீவீரமாக எதிர்ப்புக் குரல் எழுப்புவதில்லை .
    எத்தனை ஆயிரம் பேர் பாதிக்கப் படும் படி ஊழல் செய்தாலும் நாம் அதை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொள்கிறோம் . நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமே கிடைக்கிறது .எல்லாவற்றுக்கும் மேல் அரசு வேலையில் சேருவதற்கு பணம் வாங்கித் தரும் தரகர்களை ஆபந்த் பாந்தவனாக மனிதநேயம் மிக்கவர்களாக பல படித்த இளைன்ஞர்களே கொண்டாடுகிறார்கள் . நம் சமூகத்தில் ஊழலை ஏற்றுக்கொள்ளும் இந்த மனப்போக்கு என்று எப்படி வந்தது ? இந்த மனநிலை மாருவதர்க்கான தீர்வுகள் என்ன .( தமிழ் தட்டச்சு பிழைகளுக்கு மன்னிக்கவும் )

  4. Dharmarajan says:

    ஊழலை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு

    பல ஆயிரம் கோடி ஊழல்கள் செய்த அரசியல்வாதிகளை நம் மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர் ஊழலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூட தீவீரமாக எதிர்ப்புக் குரல் எழுப்புவதில்லை .
    எத்தனை ஆயிரம் பேர் பாதிக்கப் படும் படி ஊழல் செய்தாலும் நாம் அதை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொள்கிறோம் . நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமே கிடைக்கிறது .எல்லாவற்றுக்கும் மேல் அரசு வேலையில் சேருவதற்கு பணம் வாங்கித் தரும் தரகர்களை ஆபந்த் பாந்தவனாக மனிதநேயம் மிக்கவர்களாக பல படித்த இளைன்ஞர்களே கொண்டாடுகிறார்கள் . நம் சமூகத்தில் ஊழலை ஏற்றுக்கொள்ளும் இந்த மனப்போக்கு என்று எப்படி வந்தது ? இந்த மனநிலை மாருவதர்க்கான தீர்வுகள் என்ன .( தமிழ் தட்டச்சு பிழைகளுக்கு மன்னிக்கவும் )

  5. GORA61 says:

    ஆ.மாதவனின் கிருக்ஷ்ணப்பருந்து(தமிழினி வெளியீடு) நாவலின் அனுபந்தமாக ‘ஆ.மாதவனின் உலகம்’ என்று தலைப்பிட்ட தங்கள் கட்டுரை மிகச்சிறந்த இலக்கியப் பாடமாகவும்,தீமையை மாதவனின் புனைவுலக மையமாக அடையாளம் காட்டும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.நாவலை முழுதாக உள்வாங்க உதவியது.மிகப்பெரிய
    இலக்கிய சேவை இது எனக்கருதுகிறேன்.

  6. Dharmarajan says:

    எழுத்தாளர் & திறனாய்வாளர் ஜெயமோகன்

    உங்களிடம் நீண்ட காலமாக என்னுள் இருக்கும் சில ஐயங்களை தெளிவு செய்ய விரும்புகிறேன் .திறனாய்வு ஒரு படைப்பின் நீள அகலங்களையும் ,ஆழங்களையும் விளங்கிக்கொள்ள உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை தான்.ஆனால் உளவியல் திறனாய்வு ஏற்படுத்தும் பக்க விளைவு அதன் பயன்பாட்டை விட அதிக தீமைகளை கொடுப்பதாக உள்ளது ..திறனாய்வாளன் படைப்பையே ஆய்வதாக இருந்தாலும் உளவியல் ரீதியாக படைப்பாளியின் அந்தரங்கத்தில் நுழைவதாக உள்ளது (அந்தரங்கம் புனிதமானது அல்லவா?)அது மட்டுமல்ல ஒருவனது உளவியல் ரீதியான பலவீனங்களை எடுத்து ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டும் போது அவனது மனம் என்ன பாடு படும் .அவனது நம்பிக்கை உடைத்து எறியப்படும் .
    இதற்கு ஜெயமோகனும் விதிவிலக்கானவன் அல்லன். உங்களுடைய எழுத்துக்களில் இருந்து உங்களுடைய சில உள்ளப்போக்குகளையும் நான் கண்டு அறிந்து இருக்கிறேன். நாகரீகம் கருதி நான் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்ப வில்லை .ஏனெனில் ஏன் மதிப்பிற்குரிய எழுத்தாளர் நீங்கள். நீங்களும் உளவியல் திறனாய்வு செய்து பல சிக்கல்களில் மாட்டி இருக்கிறீர்கள் .
    இத்தகைய சுழலில் உளவியல் திறனாய்வு உண்மையிலேயே தேவை தானா?அப்படி என்ன அதன் இலக்கிய பயன்பாடு?

    தர்மராஜன்

    • அன்புள்ள தர்மராஜன்
      நான் உளவியல் விமர்சனம் செய்வதில்லை- அதற்கான உளவியல் கருவிகளில் நான் பயிற்சிபெற்றவன் அல்ல. உளவியல் ஆய்வு என்பது ஒரு பேச்சில் அல்லது படைப்பில் கிடைக்கும் சில நுண்மையான குறிகளைக் கொண்டு அதை வெளிப்படுத்தியவனின் மனதுக்குள்ளும் ஆழ்மனதுக்குள்ளும் நுழைய முயல்வது. நான் ஒரு படைப்பில் என்ன எழுதப்பட்டு நமக்கு கிடைக்கிறது என்று மட்டுமே பார்ப்பேன். அந்த விஷயங்களை சீராக அடுக்கி அந்த படைப்பியக்கத்தின் பரிணாமத்தை, அதன் மையம் அல்லது சாரம் அல்லது வெளிப்படுத்தவிழையும் கருவை நோக்கிச் செல்ல முயல்வேன். இதை நான் பிரதிசார்ந்த விமரிசனம் என்று ண்ட்டுமே சொல்வேன்.
      ஜெ

  7. ramalingamn says:

    நீங்கள் சொல்வது மிகச்சரி. பிரபல ஊடகங்கள் எப்போதும் மற்றவர்கள் தனித் தன்மையை அழிப்பதில் குறியாக இருக்கும். அதற்கு நீங்கள் மயங்காமல் விழிப்பாக இருப்பது மிகச் சரியே. லஞ்சம் வாங்குபவர்கள் எப்போதும் மற்றவர்களையும் தன் வட்டத்துக்குள்ளே இழுப்பார்கள். அதில் அவர்களுக்கு ஏதோ ஒரு நிம்மதி கிடைக்கிறது. அரட்டை அரங்கத்தின் தன்மையை உணர வைத்ததற்கு நன்றி.

  8. karthik says:

    அன்புள்ள அண்ணா அவர்களுக்கு,

    நான் ஒரு தமிழ் இணைய இதழ் துவங்க உள்ளேன். முற்றிலும் இலவச சேவையாக இதை செய்ய உள்ளேன். இதற்கு உங்கள் ஆசிகள் வேண்டும்.
    என்னுடைய வலை பதிவு http://karthikthoughts.co.cc

    கார்த்திக்

  9. Prasanna says:

    அன்புள்ள ஜெயமோகன்,
    இனிய மாலை வணக்கம். எனக்கு சமீப காலமாக தொலைகாட்சிகளில் அதிகரித்து வரும் ஒரு எண்ணம் சார்ந்த விளம்பரங்களை பார்க்கையில் மனம் பதறுகிறது. அவற்றுள் சில… கண்ணாடி போடுவது அழகுக்கு குறைவு என்பதால் லென்ஸ் பொருத்தி கொள்ள சொல்லும் விளம்பரம். ( அது குழந்தை என்றாலும் கூட..) MRI ஸ்கேன் போன்ற தீவிர நோய்களுக்கு குழந்தைகள் செல்ல வேண்டி இருக்கிறதே என்ற வருத்தம் சிறிதும் இல்லாமல் அதையும் அழகாக்கி இருக்கிறோம் என்ற பெருமிதத்தை வெளிபடுத்தும். விளம்பரம். குழந்தையின் காதுகளுக்கு முதலில் அறிமுகமாக வேண்டிய தாயின் குரல் தந்தையின் குரல் இவற்றை பற்றி கூறாமல் HOME THEATRE குரலால் குழந்தை ஆச்சர்யம் அடைவது போல காட்டுவது என நம்மை நம்முடைய இயல்பில் இருந்து பிய்த்து எடுத்து செல்ல முயற்சி செய்கிறதா இன்றைய விளம்பரங்கள். பொருளாதரத்தை அழிப்பது இல்லாமல் வாழ்க்கை பாதையே இந்த விளம்பரங்கள் மாற்றி விட்ம..?\
    Prasanna

  10. D Rajesh says:

    அன்புள்ள ஜெயமோகன்,

    தமிழனாக இருந்தம், மிக நன்றாக தமிழ் எழுத பேச தெரிந்தும், தமிழ் இலக்கிய மற்றும் இலக்கணத்தைப்பற்றி அவ்வளவாக படித்ததில்லை! உங்களின் எழுத்துகளைபடிக்க ஆரம்பித்த பின்னர்தான் எனக்கு தமிழை இன்னும் ஆழமாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரத்தொடங்கியுள்ளது!
    ஒரு கோர்வையாக சிஸ்டமாட்டிக்காக எப்படி இதை அணுக வேண்டும் என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்!

    உங்களிடம் இதை கேட்பதற்கு வலுவான ஒரு காரணம் இருக்கிறது! நீங்கள் வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சிறந்த வரலாற்று ஆக்கங்கள் பற்றி எழுதியதை படித்தேன். அதில் நீங்கள் எந்தெந்த ஆசிரியர்கள் எந்த பின்னணியிலிருந்து வந்தார்கள், அவர்களின் சார்பு மற்றும் அவர்கள் எழுதிய இந்திய வரலாறு எதை அடிப்படையாக கொண்டது என்பதை படித்ததில் நிஜமாகவே அசந்து போனேன்! நீங்கள் சொன்ன புத்தகங்களில் சிலதை படித்துள்ளேன். நீங்கள் சொன்னது மிக சரி! அப்படியே ஒத்து போகிறது! இந்த அடிப்படையில் உங்களை கேட்க்கிறேன், தமிழ் இலக்கன இல்லக்கிய விஷயத்தில் எதை எப்படி படிக்கவேண்டும் என்று?
    சொன்னால் உதவியாக இருக்கும்!

    மேலும், என்னுடைய தனிப்பட்ட கருத்து, உண்மையான தமிழ் முன்னேற்றத்திற்கு, ஆய்விற்கு, தமிழ் மற்றும் தமிழ் சார்ந்தவர்களின் சிந்தனைகள் மற்றும் ஆக்கங்கள் இன்னுமும் உயிருடன் இருப்பதற்கு காரணம் உங்களைப்போன்ற சிலர்தான் என்பது! நீங்கள் தமிழ் மொழியை தாய் மொழியை கொண்டவர் அல்ல என்பதை தெரிந்த உடன் என் ஆச்சரியம் மிக மிக அதிகமானது! வாழ்க உங்கள் தமிழ் தொண்டு! உங்களின் இன்றியமையாமை, ஆற்றல், பங்களிப்பு, மற்றும் பயன் இருபது வருடத்திற்கு பின்னர் மிக பலருக்கு தெரியவரும், பேசப்படும், பல விவாதங்களுக்கு அடித்தளமாகும் என்பது திண்ணம்!

    இராஜேஷ்

  11. senthilkumar says:

    ஜெயா,
    நான் எனது பால்ய காலங்களில் கோவில் சொற்பொழிவுகள் கேட்டு வளர்த்தேன் .(கிருபானந்த வாரியார்,கீரன்,சுகிசிவம்,மற்றும் கம்பன் விழாக்கள் -கோவை).
    பின் நண்பர்கள் முலம் cHARIATES OF GOD BY ERICHVAN TONICON வீரவண்டி ரவிச்சந்திரன் மொழி பெயர்ப்பு மற்றும் கம்யுநீசம் அறிமுகம் கிடைக்க கடவுள்
    YEDIRPPU பாதையில் பயணம் ,சுஜாதா கட்டுரை என்னை இருக்கிறார் இல்லை என்பதில் இருந்து தேவை /தேவை இல்லை என திரும்பியது .ஓஷோ வின் பல புத்தகங்கள் என்னை தர்க்கம் போதித்தது .ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பாதி புரிந்தும் புரியாமலும் படித்தேன்.விஷயங்களை ஆழ்ந்து நோக்க பல மன கட்டுகளை உடைத்தார் ஆனால் அவர் கூறுவதை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருந்கன. உங்கள் விஷ்ணு புரம் நாவல் தற்போது தான் படித்து முடித்தேன்.மிக கடினமான பகுதிகள் நாவலின் ஓட்டத்தில் புரிந்தது. எனது தத்துவ அறிமுகம் மிக குறைவு என்பதால் தங்களின் இந்து தத்துவ அறிமுக புத்தகங்களை படித்து வருகிறேன்.ஆன்மிகம் போலி ஆன்மிகம் பகுதி இன்னமும் பல புரிதல்களை ஏற்படுத்தியது.
    உங்களால் எனக்கு ஜிட்டு கிருஷ்ணமுர்த்தி வழிகள் பற்றி புரிதல்களை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்.
    உங்கள் வலை பூவில் இதற்கு இடம் உண்டு என நம்புகிறேன்.

  12. oshonis says:

    தமிழுக்கு வார்தை இல்லை,,,ஐயா இந்த பழைய கதையை (நித்ய) விட்டு விட்டு…சதா இந்த உள்ளுணர்வு தேடலை பற்றியே நாடூவோம்…ஐயா பதஞ்சலி பற்றி இன்னும் எனக்கு தெரிய வழி சொல்ல வேண்டும். .

  13. gomathi sankar says:

    நான் உங்கள் நெடுநாள் வாசகன் என்று சொல்ல மாட்டேன் ஆனால் ஒரு திறப்பு கிடைத்ததும் உங்கள் எல்லா நூல்களையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்தேன் [அது எனது பாணி] இரண்டு நூல்கள் தவிர …ஒன்று கொற்றவை மற்றது பனிமனிதன் இரண்டையும் எங்கு பார்த்தாலும் எடுத்துப் பார்த்து விட்டு வைத்து விடுவேன் கொற்றவை பழந்தமிழில் எழுதப் பட்டது என்ற அச்சம் காரணம் இரண்டாவது அதன் கதை!தமிழ் வெளியில் எனக்கு பிடிக்காத உருவகம் கண்ணகியும் சிலப்பதிகாரமும் காரணங்கள் பல வேறிடத்தில் சொல்லவேண்டியது அது பனிமனிதனை ரொம்ப தயக்கத்துடன் போனமாதம் வாங்கினேன் தயக்கத்தின் காரணம் தமிழில் சிறுவர்களுக்கான இலக்கியத்தின் தரம் எனக்கு தெரியும் நிறைய எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கு எழுதுகிறேன் என்று காமடி பண்ணி இருக்கிறார்கள் மொழி மாற்றம் செய்யப் பட்ட காமிக்ஸ்கள் அளிக்கும் உவகையை கூட அவை அளிப்பது இல்லை விஷ்ணுபுரம் போன்ற சிக்கலான உரைநடை சட்டையை உங்களால் கழற்றி வைத்து விட்டு எழுதமுடியுமா என்ற சந்தேகம் வேறு இருந்தது ஆனால் படிக்க ஆரம்பித்ததும் சட்டென்று எல்லா சந்தேகங்களும் உதிர்ந்து அந்த உலகத்துக்குள் அமிழ்ந்து போய்விட்டேன் நிறைய இடங்களில் அவதார் நினைவு வந்தது ஆனால் இதை பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள் !அவதார் இன்றைய தொழில்நுட்பம் கொண்டு காண்பித்ததை உங்கள் மொழியால் கண்முன்பு கொண்டுவந்திருக்கிறீர்கள் படித்து முடித்ததும் இதை நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும் என தோன்றியது பால் கோல்கோ போன்றவர்கள் எழுதும் புத்தகங்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல பனிமனிதன் அல்கெமிஸ்ட் அளித்த உவகையை விட பனிமனிதன் கூடுதல் உவகையை அளித்தது ஆனால் பனிமனிதனை வெறும் உவகை தரும் கதையாக கருத முடியவில்லை பெரிய பெரிய புத்தகங்களில் கிடைக்காத சிக்கலான சில தத்துவ சந்தேகங்களுக்கு எனக்கு விடை இதில் கிடைத்தது [உங்கள் மனம் இன்னும் அந்த தளத்திலேயே இருப்பதால்தான் என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன் ]உண்மையில் மிகவும் கொண்டாட வேண்டிய புத்தகம் இது இந்த மாதிரியான புத்தகங்கள் நம்முடைய பள்ளி நூலகங்களில் கிடைத்தால் அவர்கள் மனவெளி எவ்வளவு விரிவடையும் !எழுதும்போது நல்ல வரவேற்பு இருந்தது என்று சொல்லியிருந்தீர்கள் ஆனால் இது சிறுவர் நூல் என்று என்னை போன்று பலர் தயங்கி ஒரு அரிய அனுபவத்தை இழந்து விடக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த கடிதம் நன்றி

  14. Parthiban says:

    ஐயா, உங்களுக்கு என் இனிய மாலை வணக்கம்.
    முதலில் உங்களுடைய அற்புதமான,ஆழமான,அழகான தமிழுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.உங்களுடைய வசனங்கள்
    சில காலங்களாக தமிழ் சினிமாவில் வலம் வரதொடங்கியிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.குறிப்பாக அங்காடிதெரு உங்கள் வசனத்தால் அழகான தெருவாகி இருக்கிறது.உங்கள் வரிகள் படத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறது.உங்கள் வசனத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் கைத்தட்டல்களாலும்,விசில்களாலும் திரையரங்கம் அதிர்கிறது.உங்களை தொலைக்கட்சியில் காட்டும் போது உங்களை பாராட்ட,உங்களிடம் பேச பல முறை தொடர்புகொண்டேன்,ஆனால் லைன் கிடைக்கவில்லை.கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது.இந்த படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டவேண்டும் ஆனால் யாருடைய தொடர்புகளும் கிடைக்கவில்லை.உங்களுடயதாவது கிடைத்ததே மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கு நிச்சயம் பல விருதுகள் இருக்கிறது.படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உங்கள் மூலமாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது.வசந்தபாலன் சார் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை,அஞ்சலி,மகேஷ்,முத்துக்குமார்,பாண்டி,ரிச்சர்ட்,கருணாமூர்த்தி சார்,அருண்பாண்டியன் சார்,விஜய் அந்தோனி,பிரகாஷ்,இன்னும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த இதயம் கனிந்த பாராட்டுக்கள்.ஜெயமோகன் ஐயா உங்களுடைய அனைத்து படங்களுமே மிகவும் சிறப்பாக இருக்கிறது குறிப்பாக நான் கடவுள் படம் சொல்லவேண்டிய ஒன்று.உங்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.உங்களுடைய பதிப்புகளை நான் படித்ததில்லை.சில நாட்களுக்கு முன் என் தோழி உங்களை பற்றியும்,உங்கள் படைப்புகளை பற்றியும் சொன்னால்,அன்று முதல் சில புத்தகத்தை வாங்குகிறேன்,படிக்கவும் செய்கிறேன்.ஒரு சாதாரண ரசிகனாக உங்கள் எழுத்துக்களை மிகவும் ரசிக்கிறேன்,மதிக்கிறேன்,காதலிகிறேன்.இதேபோல் உங்களிடம் நிறைய எதிர்பார்கிறேன்.உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.வாழ்த்துக்கள்.நன்றி ஐயா நீங்கள் எங்கள் நடுவில் இருப்பதற்கு.உங்களை போல் ஒருவர் எங்கள் மத்தியில் இருப்பதற்கு நாங்கள் என்ன தவம் செய்தோம் என்று தெரியவில்லை.ஐயா உங்களுக்கு என் அட்வான்ஸ் பிறந்தநாள்வாழ்த்துக்கள்.

  15. கார்த்திகேசன் says:

    அன்பு ஜெ !
    சமீப காலமாக நிறைய ஆங்கில நாவல்கள் வாசிக்கத் துவங்கியுள்ளேன். இவற்றை வாசிக்கையில் இவை அனைத்திலும் ஒருமித்ததொரு தன்மையினை என்னால் உணர முடிந்தது. அது என்னவெனில் இவை அனைத்திலும் தனி நபரின் சுதந்திரத்தை மதிக்கிறேன் என்கிற பெயரில் ஒருவருக்கொருவர் சரிவர மனம்விட்டு உரையாடிக்கொள்ள மறுக்கிறார்கள். இதனை இவனிடம் / இவளிடம் கேட்டால் அது அத்துமீறல் ஆகிவிடுமோ என்னும் எண்ணத்திலேயே நாம் நமது சமூகத்தில் மற்றவர் மீது இயல்பாய் எடுத்துக்கொள்ளும் உரிமையையும், பாராட்டும் அன்பினையும் அவர்கள் எடுத்துக்கொள்ள தயங்குகிறார்கள். அவர்களின் பல்வேறு சிக்கல்களுக்கு – பல சமயங்களில் நாவலின் கருவாய் அமைக்கப்படும் சிக்கல்களுக்கும் – இந்த குறைபட்ட பரிமாற்றமே காரணம் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

    மேற்சொன்ன எனது உணர்வும் உற்று நோக்கலும் சரியானதா? சரியானதெனில் மேற்கத்தவரின் கலாச்சாரம் அத்தகையதுதானா? அவர்கள் ஒருபோதும் மனம்விட்டு பேசி பழகி அழமாட்டார்களா?

    சமயம் இருந்தால் பதிலளிக்கவும்.

  16. Sudhagar says:

    மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு!
               நான் உங்களை இதற்கு முன் வாசித்தது இல்லை. சித்தர்கள் பற்றி எப்போதும் போல அன்றும் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது உங்கள் ரசவாதம் பற்றிய சிறுகதைக்கு இட்டுச் சென்றது Google. அதுதான் நான் வாசித்த உங்களது முதல் எழுத்துகள். படித்தபின் நினைத்தேன் இவரை எப்படி இத்தனை நாள் தவறவிட்டேன் என்று….

              உடனே உங்களது புத்தகங்கள் இனையத்தில் எங்கு கிடைக்கும் என்று Google இடம் கேட்டேன் அது உடுமலை.காம் க்கு என்னை கூட்டிச்சென்றது.

              பார்த்தவுடன் என்னை கவர்ந்தது விஷ்ணுபுரம். 20 நாட்களுக்கு முன் உடுமலை.காம் லிருந்து விஷ்ணுபுரம் தருவித்து படிக்கத்துவங்கினேன். எனக்கு பிடித்த எழுத்துகள் என்று வரிசைப்படுத்தினால் அதில் அமரர் கல்கிக்கே முதலிடம். பல தளங்களில் ஒரே நேரத்தில் பயணிக்கும் நீங்கள் கல்கியை தண்டித்தான் போகிறீர் சிற்சில இடங்களில்.

              விஷ்ணுபுரத்தின் கதையை ஒரு 100 பக்கங்களில் அடைத்திட முடியும், ஆனால் இதில் நிறைந்திருக்கும் தத்துவ விசாரணைகளை எப்படி உங்களால் 800 பக்கங்களுக்குள் அடக்க முடிந்தது என்று நினைக்கும்போது வியப்பாய்தானிருக்கிறது.

              உண்மையை சொல்கிறேன் ஜெமோ அவர்களே ! விஷ்ணுபுரம் படிக்கத்துவங்கிய 2 ம் நாளிலிருந்து என் தூக்கம் எனக்கு வித்த்யாசமாய் பட்டது. என்னுள் பல காலமாய் சுழன்று அடிக்கும் பல கேள்விகளில் சிலவற்றிற்கு விஷ்ணுபுரம் விடைதருகிறது. பல கேள்விகளுக்கு, எரியும் நெருப்பிற்கு நெய்யாய் இருக்கிறது.

              உங்கள் விஷ்ணுபுரம் ஒரு வேள்வி. கேள்விகளை அவியாக்கினால் பதில்கள் வரமாக. ஆனால் எல்லா கேள்விகளும் விடையறுக்கபடுவதில்லை…………………..

              ஸ்ரீபாதத்தில் வரும் வர்ணனைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வியப்பாய் இருக்கிறது. உங்களது எழுத்துகள் அந்த கற்பனை நகரை கண்முன்னே கொணர்கிறது.

              விஷ்ணுபுரத்தின் முன்று பாகங்களும் அருமை. எனக்கு மிகவும் பிடித்தது, மீண்டும் மீண்டும் படிப்பது இரண்டாம் பாகம் கெளஸ்துபம்…

              என்னை கவர்ந்த , என்னை பாதித்த சில பகுதிகள்,

              பிங்கலனிடம் மகாபிரபு கூறுவார்,” உன்னை மீட்கும் வழி பற்றி சிந்தித்தேன் . உன்னை கூட்டிவர தாசித்தெருவிற்கு கூட வரத்திட்டமிட்டேன். ஆனால் அன்றிரவு தூக்கமற்று புரண்டு படுத்தபடி இருளுக்குள் நானும் எனது ஆத்மாவும் தனியே இருக்கும் போது அறிந்தேன்- என் மனம் ஏங்குவதை. சென்றுபோன என் இளமையை, இழந்த இன்பங்களை, இனி மீளமுடியாத அந்த உலகை…… ”இன்றைய சாமியார்கள், ஆன்மீகவாதிகளின் நிலையை நியாபகபடுத்தும் வரிகள்…

              “நாம் பார்க்கிறோம், பார்க்கும் கணத்திற்கும் அப்பொருளை பார்வை தொட்ட கணத்திற்கும் இடையே ஒரு கால இடைவெளி உள்ளது. அது மிகமிகச் சிறியதாக இருக்கலாம். ஆயினும் அவ்விடைவெளியில் அப்பொருள் அழிந்து இன்னொன்று பிறந்திருக்கும்………”

              “புயலடிக்கும் நள்ளிரவில், மின்னலொன்று காட்டிய காடு போன்றது பிரபஞ்சக் காட்சி. அக்காட்சியை வைத்து காட்டை அனுமானிப்பதே பிழையானது. அக்காட்சி நம் கண்களை அடைந்த கணம், ஒரு நூறு மரங்கள் சரிந்திருக்கும். அடுத்த மின்னல் நமக்கு காட்டுவது வேறு காடு…….. ”

              “அறிய முடியாத ஏகம் என்று வேதம் கூறுகிறதே அது என்ன ? …. அறிய முடியாத ஏகம் என்ற சொல்லே முரண்பட்டது. அறிதலில் இருந்ததல்லவா ஏகம் என்ற எண்ணம் வர முடியும்…”
    அஜிதனின் இந்த பதில் எனக்குள்ளேயே என்னை கைதட்ட வைத்தது.

              “வேதங்களை கண்டறிந்த ஆதி ரிஷிகள் அவற்றை ஏன் பெருவளியிலேயே விட்டுச்செல்லவில்லை….” என்ற கேள்வியும் அதை தொடர்ந்து நிகழும் தர்க்கமும் அதில் கிடைக்கும் விடையும் சவுக்கை சுழற்றும், ஒரு உணர்வு.

              “கற்பவன் கடந்து செல்ல முடியாத நூல் எதுவுமில்லை. அது வேதங்களுக்கும் பொருந்தும்”

              “இறக்கும் உடலில் இருந்து ஆன்மா எங்கு செல்கிறது?…. விறகில் நெருப்பு எரிகிறது, விறகில்லையேல் நெருப்பு இல்லை. விறகு எரிந்து முடிந்து விட்டால் நெருப்பு முற்றிலும் அணைந்துவிடுகிறது. எவராவது விறகில் எரிந்த நெருப்பு விலகிச்சென்று விட்டது, காற்று வெளியில் அது உள்ளது என்று கூற முடியுமா?…….”

              இப்படி நிறைய இருக்கு சார்…….

              நிச்சயம் சொல்வேன் தமிழ் இலக்கியம் உள்ளவரை விஷ்ணுபுரம் இருக்கும்.

              ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒன்று. இல்லை இல்லை ஒவ்வொருவரும் படித்திருக்க வேண்டிய ஒன்று….

              சிந்திக்கப்படாத ஆனால் சிந்திக்க பட வேண்டியவை நிறைய நிரம்பியது விஷ்ணுபுரம்.

              மொத்தத்தில் நிலவின் மறுபுறம் உங்கள் விஷ்ணுபுரம்.

  17. tamil indru says:

    தோழமையுடன் ஓர் அழைப்பு…

    அன்புமிக்க திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.
    நாங்கள் – பல்வேறு துறைகளில் பணியாற்றும் சில நண்பர்கள் – உங்களைப்போலவே – சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்கள் ‘தமிழ் இன்று’ என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறோம். நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்லர். வணிக நோக்கமும் நமக்கு இல்லை.
    இன்றைய இந்தியாவும் தமிழ்ச் சமூகமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ‘தமிழ் இன்று’ வெளியிடும். அந்தந்தத் துறைசார் நிபுணர்கள், களப் பணியாளர்கள், எழுத்துலகம் தவறவிட்ட ஆளுமைகளின் படைப்புகளை ‘தமிழ் இன்று’ வெளியிடும். குறிப்பாக, வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயங்கும், புறக்கணிக்கும் விஷயங்களில் ‘தமிழ் இன்று’ அக்கறை செலுத்தும். இது ஒரு கூட்டுமுயற்சி. ஆகையால், இதில் உங்களுடைய பங்கேற்பையும் வேண்டுகிறோம்.
    பொதுவாக, நம் நாட்டிலுள்ள ஊடகங்கள் – அவை பத்திரிகைகளாகட்டும், தொலைக்காட்சி அலைவரிசைகளாகட்டும்; ஏனைய பத்திரிகைகளையோ, தொலைக்காட்சி அலைவரிசைகளையோ எதிரிகளாகவே பார்க்கின்றன. ஒரு பத்திரிகையாளர் விபத்தில் இறந்தால்கூட இன்னொரு பத்திரிகை அந்தச் செய்தியை வெளியிடுவதில்லை.
    ஆனால், இணையப் பத்திரிகையாளர்கள் – வலைப் பதிவர்கள் மிகப் பெரிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்னொரு இணையத்தையோ, வலைப்பூவையோ, பதிவரையோ அறிமுகப்படுத்தும் பழக்கமும் இன்னொரு அமைப்புக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் அதற்கு உதவும் பழக்கமும் இந்த இணைய உலகில் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இந்த நல்ல கலாசாரத்துக்கு நீங்களும் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறீர்கள். இப்போது இணைய உலகில் புதிய அறிமுகமாக மலரும் ‘தமிழ் இன்று’ உங்களுடைய வாழ்த்துகளையும் வரவேற்பையும் எதிர்பார்க்கிறது.
    நம் சமூகத்தில் தனித்து நின்று எவர் ஒருவராலும் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. மாற்றத்தை உருவாக்குதல் ஒரு கூட்டுமுயற்சி. இப்போது உங்களுடைய அந்த முயற்சியில் நாங்கள் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம். நீங்களும் எங்களை இணைத்துகொள்ள வேண்டுகிறோம். கீழ்க்காணும் எங்களுடைய வலைப்பூவுக்கு உங்களை வரவேற்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த வலைப்பூ மலரும். வாசித்துப் பாருங்கள். எங்களது பாதை உங்களுக்கும் பிடித்திருந்தால், எங்களை உங்கள் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். குறைகள் தென்பட்டால் தாராளமாக எமக்கு எழுதுங்கள்… வாருங்கள்….

    தமிழ் இன்றில் இந்த வாரம்…

    நேற்று உறை; இன்று பெட்டி; நாளை?
    ஊடகங்களைத் தோலுரிக்கிறார் சந்தர் டி ராஜ்

    பேயோன் 1000
    கிருபானந்தம் புத்தக விமர்சனம்

    தேரையும் தவளையும்
    டாக்டர் பானுமதியின் நம்மைச் சுற்றியுள்ள உலகம்
    மேலும்…
    http://tamilindru.blogspot.com/

  18. jakobian says:

    Dear Jeyamohan,

    Hope you are doing great.

    I remember reading one of your articles about the “African authenticity in the writings of Adichie “.In the following video she talks more about her writings and its interesting

    If you could find some time have a look at it

    Regards,
    Jacob Manuel

  19. VEEREN3385 says:

    அன்புள்ள ஜெ,

    தங்கலடுய நிலையை தெளிவுபடுதிமைக்கு நன்றி. ஓய்வு எடுங்கள். புத்தோனற்சியுடன் வாருங்கள்.
    அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி
    வீரேந்திரன்

  20. sisulthan says:

    சமீபத்தில் நாகர்கோவிலில் கொற்கை புத்தகம் வாங்கினேன், பக்கங்களின் அளவுதான் உங்களுக்கு தெரிதிருக்குமே, வழக்கம்போல் முதல் பக்கத்திலும், நடுப்பக்கத்திலும் பெயரை எழுதி ஒரேமூச்சாக படித்து முடித்துவிட்டேன், படிக்கும்போது நடுவில் சுமார் 50 பக்கங்களை காணோம், அதற்க்கு பதிலாக 50 பக்கங்கள் இருப்பதே இருந்தது. என்ன செய்வது?

    முன்பு காடு புத்தகம் வாங்கினேன், இறுதிக்கு முந்திய10 பக்கங்களை காணோம்,

    நாஞ்சில் நாடனின் ”நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று” புத்தகத்தை அந்த கட்டுரையை படிக்கவென்றே வாங்க அலைந்தேன்,அந்த கட்டுரை மட்டும் முழுதாக இல்லை அந்த புத்தகத்தில்! என்ன செய்வது???

  21. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
    நான் உங்களுடைய “இன்றைய காந்தி ” படைப்பை தான் முதலில் வாசித்தேன் , சில மாதங்களுக்கு முன் எங்கள் நண்பரின் நினைவாக நாங்கள் நடத்தி வரும் ஒரு trust சார்பாக எங்கள் ஊரில் உள்ள நூலகத்திற்கு புத்தகம் வாங்கி கொடுக்கும் பொழுது இன்றைய காந்தி வாசிக்க நேர்ந்தது .அதன் பின்னர் சுமார் 6 மாதங்களாக உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன் .காந்தி அவர்களை பற்றிய ஒரு புரிதலுக்கு எனக்கு இது துணையாக இருந்தது .காந்தி அவர்களை பற்றி மேலும் வாசிக்க , அவரை புரிந்து கொள்ள பெரிதும் உறுதுனையாக இருந்தது .

    நான் ஒரு ஆயுர்வேத மருத்துவர் .எனக்கு உங்களிடம் இதை கேட்கணும் என்று தோன்றியதால் கேட்கிறேன்.ஆயுர்வேதம் நல்ல பழமையான மருத்துவ முறை .அதே போல் யோகமும் இந்திய கலாச்சாரத்தில் பழமையானது . ஒரு சாரார் பதஞ்சலி அவர்கள் தான் மறு பிறப்பாக சரக சம்ஹிதை இயற்றினார் என்று கூறுவதும் உண்டு .ஒரு பெரிய விந்தை என்னவென்றால் சரக ,சுஸ்ருத ,வாக் பட்ட முதல் 19 ம் நூற்றாண்டு வரை எழுத பட்ட எந்த படைப்பிலும் ஹட யோகம் ஆசன பிராணயாம மருத்துவ குணங்கள் பற்றி ஒரு வார்த்தை எழுத படவில்லை .இன்றைக்கு எல்லா நாடுகளிலுமே யோகா ஆசனங்களை ப்ரனயமத்தையும் ஆயுர்வேததுடன் இணைத்து நோய்களை குனபடுத்த பயன்படுத்துகின்றனர் . ஆயுர்வேதமும் யோகத்தை போலவே மொக்ஷதையே முழுமையான இலக்காக சொல்கிறது . தர்ம அர்த்த காம மோக்ஷ எனும் 4 புருஷர்தாங்களை அடைய ஆரோக்கியம் மூலம் என்று சொல்லுகிறது .இருந்தும் என் இந்த பழமையான 2 systems ஒரு நேர்கோட்டில் சந்திக்கவில்லை என்று புரியவில்லை .ஆனால் ஆசனங்களின் மருத்துவ மகிமை அந்த ஆசனத்தின் விவரிப்பில் கிடைக்கிறது . உலக வாழ்க்கைக்கு யோகம் / ஆசனம் தேவை இல்லை என்று பொருள் கொள்ளலாமா ?
    மேலும் இன்றைய வணிகமயம் காரணமாக யம நியமங்கள் (அஷ்டாங்க யோகத்தின் முதல் 2 கட்டங்கள்) பின்பற்றதவர்களுகும் கற்று கொடுப்பது சரியா?

  22. kamaljamo says:

    படித்ததில் பிடித்தது

    http://kadugu-agasthian.blogspot.com/2010/05/blog-post_17.html

  23. souganthigam says:

    மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு
    தங்களின் ‘காடு’ வாசித்தேன்.நன்றாக இருந்தது.
    நன்றி.

  24. Jina says:

    அன்புள்ள ஜெயமோகன்,
    உங்கள் சிறுகதை ” பரிணாமம்” சமீபத்தில் படித்தேன்.
    அதில் தாங்கள் கூரி இருப்பது அனைத்தும் கற்பனையா, அல்லது உண்மையா என்று குழம்பி உள்ளேன். அந்த கருன்காணிகள் உண்மைலேயே இருக்கிறார்களா? இருந்தால், ஏன் நாம் அவர்களை பற்றி அறிய வில்லை?

  25. இரா. சீனிவாசன் அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு நான் சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிகின்றேன். ‘புதியபனுவல்’ என்ற பெயரில் காலாண்டு ஆய்விதழ் நடத்தி வருகின்றேன். இந்த இதழ் இணையத்திலும் வெளிவருகின்றது. முகவரி http://indianfolklore.org/journals/index.php/Panu இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். இப்போது குறிப்பிட விரும்புவது நான் பதிப்பித்துள்ள நல்லாப்பிள்ளை பாரதம் பற்றி. இந்த நூலை எழுதிய நல்லாப்பிள்ளை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த கவிஞர். பாரதக் கதையைத் தமிழில் முழுமையாகக் கூறும் நூல் இதுவே. பதினெட்டுப் பருவங்களையும் சுமார் 14000 பாடல்களில் இவர் பாடியுள்ளார். தற்காலத்தி வாசகர்கள் படிக்கும் விதமாக சந்தி பிரித்து எளிமையாப் பதிப்பித்திருக்கிறேன். முதல் பாகம் 1608 பக்கம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த இரண்டாம் பாகத்துடன் (640 பக்கம்) நல்லாப்பிள்ளை பாரதம் நிறைவு பெற்றது. தகவலுக்காகத் தங்களுக்கு இதைத் தெரிவிக்கின்றேன்.

  26. அன்புள்ள ஜெ,
    மேலும் மேலும் உங்கள் படைப்புக்களை வாசித்து வருகிறேன் . உங்களை வாசிக்கும் பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் நன்றாக உணர முடிகிறது , படைப்பில் உங்களின் நேர்மை , உங்கள் எழுத்தை கண்களுக்கு முன்னால் சினிமா போல காட்சி படுத்தும் விதம் ..
    மீண்டும் ஒரு கேள்வி உங்களிடம் ,மருத்துவர்களுக்கான பொது தளத்தில் விவாதத்தில் இந்த பிரச்சனை எழுப்ப பட்டது , கருணை கொலை பற்றிய பார்வை , மருத்துவர்கள் அனைவரும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை பதிவு செய்தனர் , பல அனுபவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது , ஒரு உயிரை எடுக்கும் வேலை நம்முடையது அல்ல என்று பட்டாலும் அவர்கள் தரப்பு கூறும் விவாதங்கள் மனதை பிசய்கிறது . ஒரு வேலை இதே கதி எனக்கு ஏற்பட்டால் நான் என்ன செய்வேன் என்று தெளிவாக தெரியவில்லை . மூளை சாவு ஏற்பட்டு இனி அந்த நிலைலிருந்து திரும்ப மாட்டார் என்று அறிந்தும் அவர்களை வைத்து மருத்துவமனை பணம் பார்கிறது சில இடங்களில் நடக்கிறது .வயோதிர்கள் பலர் தங்கள் பிள்ளைகளால்
    கைவிடப்பட்ட நிலையில் என் உயிர் இருந்து பிரயோஜனம் இல்லை , என்னை கொன்றுவிடுங்கள் என்று மனம் வெதும்பி கெஞ்சும் சம்பவங்கள் நிறைய நடக்கிறது . தென் தமிழ்நாட்டில் அதவது ராமநாதபுரம் , சிவகங்கை பரமக்குடி போன்ற இடங்களில் தொன்றுதொட்டு ஒரு வழக்கம் இருக்கிறது வயோதிகர்கள் கவனிபாறன்று கிடந்தால் அவர்களுக்கு “தலைக்கு ஊத்துறது ” எனும் சடங்கு இருக்கிறது, சொந்தங்களை எல்லாம் அழைத்து , எல்லோர் சமதத்துடனும் அவர்களுக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பட்டி வெயிலில் கிடக்க செய்வார்கள் , உண்ணவும் இளனி, தயிர் என்று குளிர்ச்சியான ஆகாரத்தை கொடுப்பார்கள் . ஓரிரு நாட்களில் ஜன்னி வந்து உயிர் துறந்திடுவார்கலாம் .கீழ் கண்ட தொடர்பை நேரம் கிடைத்தால் பாருங்கள். http://week.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.do?sectionName=Current+Events&contentId=6468916&programId=1073754900&pageTypeId=1073754893&contentType=EDITORIAL
    அருணா என்பவற்றின் வாழ்கை சம்பவம்.
    நமது நாட்டில் கருணை கொலை அனுமதிக்கலாமா ? இவ்விஷயத்தை பற்றி தங்களின் பார்வை என்ன ? இந்தியாவின் ஆன்ம பலம் என்று போற்ற படும் குடும்ப உறவுகள் சீரழிவதினால் இம்மாதிரி சம்பவங்கள் நடக்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது . dying with dignity என்பது எல்லாரின் ஆசை தானே , அது அவர்களின் உரிமையும் கூட அதை விடுத்தது மல ஜல உபாதைகளுடன் , மற்றவர்களின் முக சுழிப்பை கண்டுகொண்டு வாழ தான் வேண்டுமா? அதே சமயம் நம் நாட்டில் இது தவறாக பயன்படுத்தப்படும் என்கின்ற பயமும் இருக்கிறது , மேற்கொண்டு குடும்ப அமைப்பினை சீர்கேடு நோக்கி இட்டு செல்லும் என்று பதிப்பும் இருக்கிறது ..உங்களின் பார்வைக்காக காத்திருக்கிறேன்
    என்றும் அன்புடன்
    சுனில் கிருஷ்ணன்

  27. அன்புள்ள ஜெ,
    நான் தங்களின் நிழல் வெளி கதைகள் சிறுகதை தொகுப்பு வாசித்தேன் .எனக்கு அதில் 3 கதைகள் குறிப்பாக மிகவும் பிடித்திருந்தது . ரூபி கதையில் அவதார் படத்தில் கூறப்படும் மனிதனுக்கும் மிருகதிருகும் இருக்கும் ஒத்திசைவை , ஆத்மா பந்தத்தை அருமையாக கூறியுளிர்கள் .
    எனது அச்சை என்னவெனில் தம்பி , மற்றும் பாதைகள் கதைகளை திரை கதை ஆக ஆக்கி நல்ல சினிமா ஒன்றை தர வேண்டும் , இந்த இரண்டு கதைகளுமே மிக அற்புதமாக உள்ளது, திகில் அம்சம் கூடுதலாக உள்ளது . ( தமிழ் தட்டச்சில் நிறைய பிழை வருவதற்கு வருந்துகிறேன் )
    என்றும் அன்புடன்
    சுனில்

  28. divya says:

    vanakam ayya,
    nan tarpodu than tangalin vasaga vatatirkul nulaindulaen..nan padita உங்களது buthagam kaadu..kalloori muditu vanda piragu ulla iruvagalil vegu neram ellam ungal kaathil naan payanamagi kondu irundaen en appavin vasavugal pinthodara..maalaiyan valiyaga avan selum iravu patiya vivaripu arpudamanadu….irudiyil neeli பற்றிய ninaivugalil sikundu varundum avan yen veroru pennin itchaiku inagugiran?epadi udnadiyaga oruvarin ninaivugalil irundu meendu vera ondrail idupada mudiyama?oru aanmaganin nesipu indamattum thana?ungal kaadhapatirathil enai migavum kavarndadu reshalam…miga nunniya patira padaypu enai porutavarai..nan inaitirku miga pudidu..tamil mozhiyail yevaru eluduvadu endru theriya villai…enavae aangilatae tamil paditi irukiraen..adarkaga manikavam…melae nan eludi irupadu en manadil thondriyavae…,tavaru edaenum irundal manikavum….endrum ungaludan thodarbil iruka virubukiraen-divya

  29. Moderator says:

    தமிழில் எழுத :

    கீழே கமண்ட் பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்து ஸ்பேஸ் கீ அழுத்தினால் தமிழில் மாறிவிடும் .

    Post a Comment
    Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

  30. madupri says:

    திரு ஜெயமோகன் அவர்களுக்கு

    Philosophy பற்றி இவ்வளவு சிந்தனை செய்கிறீர்களே…Economics பற்றிய உங்கள் கருத்து என்ன ? சுஜாதா சொன்னது போல் வெறும் Fake Science என்பதுதான் உங்கள் மதிப்பீடுமா ? ‘மனிதன் அளவற்ற பேராசையுள்ளவன், அளவற்ற நெஞ்சுரமுள்ளவன், அளவற்ற அறிவாற்றலுள்ளவன் (unbounded desire, unbounded willpower, unbounded rationality என்பதன் தமிழாக்கம் – என்னால் முடிந்த அளவு) என்று தொடங்கும் Classical Economics உலக வரலாற்றின் சென்ற நான்கு நூற்றாண்டுகளை மொத்தமாக பாதித்துள்ளது. கடவுள், ஆன்மீகத் தேடல் போன்றவற்றைப் பற்றி எல்லாம் கவலையே படாத Economic Model-கள் கொண்டு தான் இன்றைய உலக அரசாங்கங்கள் நிர்வகிக்கப் படுகின்றன. இதன் அடிப்படை தாக்கங்கள் இன்றைய உலக வாழ்க்கையில் எந்த மனிதராலும் தவிர்க்க இயலாதவை (சமீபத்தில் LCD TV வாங்கிய உங்களாலும் கூட !!). Socialism vs Capitalism என்ற மகத்தான போரில் உங்கள் நிலைப்பாடு என்ன ?

    நான் உங்கள் வலைப்பூக்களை தவிர உங்கள் புத்தகங்கள் இன்னும் ஏதும் படிக்க ஆரம்பிக்கவில்லை. Blog கூட சமீப காலமாகவே – தேடிப் பிடித்து சில பழைய பூக்களை படித்து வருகிறேன். அதனால் இந்த கேள்விகளை நீங்கள் ஏற்கனவே அணுகி இருந்தால் மன்னிக்கவும்.

    மதுசூதனன்

  31. devarajarunachalam says:

    திரு ஜெயமோகன் அவர்களுக்கு
    எனக்கு நீண்ட நாட்களாகவே law of attraction மற்றும் law of karma இடையேயான தொடர்பு குறித்து பெரிய குழப்பம் இருந்து வருகிறது .குறிப்பாக rhonda byrne’s THE SECRET பார்த்ததிலிருந்து.இது குறித்து தாங்கள் விளக்க முடியுமா .மனித வாழ்வில் இவை இரண்டில் எவற்றின் தாக்கம் இருக்கும் .விடை white or black ஆக மட்டும் இருக்குமா அல்லது grey உண்டா.தங்கள் விளக்கத்தை அறிய ஆவலாக உள்ளேன் .
    நன்றி
    தேவா

  32. சார், எனக்கு நெடுநாட்களாய் ஒரு சந்தேகம்..
    இரண்டு ஏக்கர் இலவச நிலம்.. விதை நெல்லுக்கு மானியம்.. உரத்திற்கு மானியம், இலவச மின்சாரம்.. விவசாய கடன்… பெரும்பாலான நேரங்களில் அந்த விவசாய கடன் தள்ளுபடி.. நாட்டில் 60 சதவிகிதத்திற்கும் மேல் விவசாயம் தான் தொழில்… இவ்வளவு செய்தும் ஏன் விவசாயி பாதிக்கப்படுகிறான்? உணவுப் பற்றாக்குறை வருகிறது? அங்கங்கு நமது சிறுதலைகளில் இருந்து பெருந்தலைகள் வரை ஊழல் செய்தாலும் 100 சதவீத மக்களின் உணவுத் தேவைக்கு 60 முதல் 70 சதவீத மக்கள் உழைத்தும் பற்றாக்குறை, வறுமை என்பது அபத்தமாக உள்ளதே..
    நன்றி.
    நாடோடி

  33. Anonymous says:

    romba nallathu

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s